ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ அனைத்து வித பொருத்தங்களும் இருந்து பெரியவர்கள் முடிவு செய்து நடத்தி வைக்கும் திருமணங்கள் கூட எதாவது ஒரு காரணத்தால் தடை பட்டு போவதும் - சகல விதமான திருமண பொருத்தங்கள் இருந்தும் அந்த தம்பதிகளின் திருமண வாழ்க்கையில் - பிரிவினை - விவாகரத்து - குழந்தை பாக்கியம் இல்லாமை - கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு- போன்ற நிகழ்வுகள் நடப்பதை நாம் கண் கூடாக காண்கிறோம் .
ஜோதிடர்கள் இந்த நாள் திருமணத்திற்கு ஏற்ற நாள் என்று ஒரு சில தேதிகளை தேர்வு செய்து இந்த தேதியில் திருமணத்தை நடத்துங்கள் என்று சொல்லி விடுவார்கள்.
அப்படி அந்த தேதியில் அந்த திருமணம் நடந்து இருந்தாலும் கூட வாழ்க்கையில் பிரகாசமான குடும்ப சூழ்நிலைகள் அமையாமல் கஷ்டப்படுவதை காண்கிறோம் .
பொதுவாக திருமண தேதிகள் 4 - 7 - 8- இந்த தேதிகளிலும் அந்த தேதிகளின் கூட்டு எண்கள் 4 - 7 - 8 - ம் எண்கள் வரும் நாட்களிலும் திருமணம் செய்யகூடாது என்பது நியுமராலஜி பார்க்கும் ஜோதிடர்களின் கருத்தாகும் .
ஆகவே 4- ம் எண்ணும் - 7 ம் - ம் எண்ணும் வரும் நாட்களில் திருமணத்தை நடத்தி வைத்தால் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது .
அடுத்து 8 ம் எண் . இது சனி பகவானின் ஆதிக்க எண்ணாகும் . கைக்கு எட்டாத ஒரு பொருளை எட்டி பிடித்து கடைசியில் அந்த பொருளே கிடைக்காமல் போக செய்வதுதான் இந்த எட்டாம் எண்ணின் குணம் .வாழ்க்கையில் கடைசி வரை போராடி கொண்டே இருக்கும் பலனை தருவதுதான் இந்த 8 ம் எண்.
ஆதலால் இந்த எண்ணின் ஆதிக்க தேதியில் திருமணம் நடந்தால் அவர்களின் குடும்ப வாழ்க்கை பிரகாசம் அடைவதில்லை . ஒரு சில எண் கணித ஜோதிடர்கள் 2 ம் எண் வரும் தேதியில் திருமணத்தை தவிர்த்து விட வேண்டும் என்பது அவர்களின் கருத்து.காரணம் 2 ம் எண்ணை குறிக்க கூடிய சந்திரன் 15 நாள் வளர் பிறை ஆவதும் - 15 நாள் தேய்பிறை ஆவதும் - போல அவர்களின் வாழ்க்கையும் ஏற்ற இறக்கமாக அமையும் என்பதால்தான் .
திருமணம் செய்து கொள்ள இருக்கும் ஆணோ பெண்ணோ அல்லது இருவருமோ வளர்பிறையில் பிறந்து இருந்தால் 2 ம் ஆதிக்க தேதியில் (அதாவது 2 - 11 - 20 -தேதிகளிலும் - கூட்டு எண் 2 க வரும் நாள்களிலும் ) திருமணம் செய்து கொண்டால் அவர்களின் திருமண வாழ்க்கை பௌர்ணமி போல் பிரகாசமாக நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும் . இதில் 29 ம் தேதியை தவிர்த்து விடவேண்டும் .
காரணம் 2 ம் எண்ணை குறிக்க கூடிய சந்திரன் மனத்தை ஆள்பவன். 9 ம் எண்ணை குறிக்க கூடிய செவ்வாய் ஆக்ரோஷ எண்ணத்தை கொண்டவன் . இந்த 29 ம் தேதியில் திருமணம் செய்தால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே மன கசப்பு ஏற்பட்டு பிரிவினை ஏற்படலாம்.
உலகமே வியக்கும் வண்ணம் நடந்த இளவரசி டயானா - இளவரசர் சார்லஸ் இருவருக்கும் திருமணம் நடந்தது 29 - 7 - 1981 அன்றுதான் .
உலகமே வியக்கும் வண்ணம் நடந்த இளவரசி டயானா - இளவரசர் சார்லஸ் இருவருக்கும் திருமணம் நடந்தது 29 - 7 - 1981 அன்றுதான் .
ஆனால் இந்த தம்பதியர்களின் சந்தோஷமான திருமண வாழ்க்கை 15 ஆண்டுகள் மட்டுமே நீடித்து விவாகரத்தில் முடிந்தது . 2 ம் எண்ணை குறிக்க கூடிய சந்திரன் வீட்டில் 9 - ம் எண்ணை குறிக்க கூடிய செவ்வாய் நீசம் அடைந்து பலன் தராமல் போவதும் . 9 - ம் எண்ணை குறிக்ககூடிய செவ்வாயின் வீட்டில் 2 ம் - எண்ணை சந்திரன் நீசம் அடைந்து பலன் தராமல் போவதும் ஜோதிடம் அறிந்தவர்கள் அறிவார்கள்.
ஆதலால் இந்த 29 ம் தேதியில் திருமணம் செய்து கொள்பவர்களின் வாழ்க்கை சிறக்காமல் போகும்.
அதேபோல் திருமண தேதி - திருமண தேதியின் கூட்டு எண் இரண்டும் சிறப்பாக அமைந்திருந்தும் திருமண வாழ்க்கை சிறக்காமல் போவதும் உண்டு. இதற்க்கு காரணம் அவர்கள் திருமணம் செய்து கொண்ட திருமண தேதியின் ஹீப்ரு எண் நன்றாக அமையா விட்டாலும் பிரச்சனைதான் . என்னுடைய ஜோதிட அனுபவத்தில் திருமண தேதி - திருமண தேதியின் கூட்டு எண் - இரண்டும் அதிர்ஷ்டமான எண்ணில் அமைந்து திருமணம் செய்து கொண்ட தம்பதியர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒத்து வராத காரணத்தால் விவாகரத்து வரை சென்று விட்டார்கள் .
அவர்களின் திருமண தேதிகளை அலசி ஆராய்ந்த பொழுது திருமண தேதியின் ஹீப்ரு எண் 26 ஆகும். DIVERCE என்ற சொல்லின் மொத்த கூட்டு தொகை 26 என்று வருகிறதே? அப்புறம் விவாகரத்து நடக்காமல் நல்ல பலன்களா? நடக்கும் .
மேலும் ஒரு தம்பதியரின் திருமணம் செய்து கொண்ட திருமண தேதி - திருமண தேதியின் கூட்டு எண் - சிறப்பாக அமைத்திருந்தும் - கணவன் மனைவி இருவருமே ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ்கிறார்கள்.
அவர்கள் திருமணம் செய்து கொண்ட தேதியின் ஹீப்ரு எண்ணை ஆராய்ந்த பொழுது அவர்கள் திருமணம் செய்து கொண்ட தேதியின் ஹீப்ரு எண் 13.
FAIL அதாவது தோல்வி என்ற சொல்லின் மொத்த கூட்டு எண்ணிக்கை 13 க தானே வருகிறது அதனால் அவர்களின் திருமண வாழ்க்கையும் தோல்வியில் முடிந்து விட்டது .
அதேபோல் திருமண தேதியில் 18 ம் தேதி மிகவும் வாழ்க்கையில் மிகவும் மோசமான பலன்களை தரக்கூடிய ஒரு தேதியாகும். பாரத போர் 18 நாட்கள் நடைபெற்றதும் - சிலுவையில் ரத்தம் சிந்தி இறந்த CHRIST (கிறிஸ்து ) என்ற பெயரின் கூட்டு எண்ணிக்கை 18 க வருவதும் .
இன்றும் கலவர பூமியாக ரத்த பூமியாக விளங்கும் இந்தியாவின் KASHMIR (காஷ்மீர் மாநிலம் ) என்ற பெயரின் கூட்டு எண்ணிக்கை 18 வருவதும் . இன கலவர பூமியாக இருந்து உயிருக்கு உத்திரவாதம் தரமுடியாமல் திகிலுடன் வாழ்க்கையை நடத்தி கொண்டிருக்கும் நாடான SRILANKA (இலங்கை ) என்ற பெயரின் மொத்த கூட்டு தொகை 18 க வருவதை நாம் காணும்பொழுது இந்த 18 ம் தேதியில் திருமணம் செய்து கொண்டால் அந்த தம்பதியர்களின் வாழ்க்கையே கலவர பூமிதான் .
ஜோதிட ரீதியாக அனைத்து ஒரு ஆணுக்கும் - பெண்ணுக்கும் அனைத்து வித பொருத்தங்களும் இருந்து கோடி கணக்கில் - லட்ச கணக்கில் செலவு செய்து வைக்கும் திருமணங்கள் கூட பிரகாசிக்க முடியாமல் போவதும் உண்டு. இதற்க்கு காரணம் அவர்கள் திருமணம் செய்து கொண்ட திருமண தேதி - திருமண தேதியின் கூட்டு எண் - முக்கியமாக திருமண தேதியின் ஹீப்ரு எண் இவைகள் கெட்ட பலனை தரும் கிரகங்களின் ஆதிக்க எண்ணில் அமைந்து இருந்தால் அவர்களின் குடும்ப வாழ்க்கையே சூன்யம்தான் .
திருமண வாழ்க்கை சிறபபாகவும் சந்தோஷமாகவும் அமைய நீங்கள் தேர்ந்தெடுக்கும் திருமண தேதியில்தான் இருக்கிறது . அதிர்ஷ்ட திருமண தேதியை தேர்ந்தெடுத்து ஆனந்தமயமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள் .
திருமண வாழ்க்கை சிறபபாகவும் சந்தோஷமாகவும் அமைய நீங்கள் தேர்ந்தெடுக்கும் திருமண தேதியில்தான் இருக்கிறது . அதிர்ஷ்ட திருமண தேதியை தேர்ந்தெடுத்து ஆனந்தமயமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுங்கள் .
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
0 கருத்துகள்:
கருத்துரையிடுக