ஒருவர், தான் செய்யும் காரியங்கள் எல்லாம் வெற்றியடைந்தால், மிகவும் சந்தோஷம் அடைவார். அதே நேரம், ஏதேனும் தடை ஏற்பட்டாலோ, அல்லது நடக்காமல் போனாலோ, 'நமக்கு நேரம் சரியில்லை போல் உள்ளது' என்று நினைத்து, ஒரு ஜோதிடரைப் பார்க்க நினைப்பார்.
நினைத்த காரியம் நிறைவேற கடவுளை வணங்கி அதற்குரிய பரிகாரத்தை செய்கிறோம் . இதில் யாருடைய தவறும் இல்லை. பரிகாரம் சொன்ன ஜோதிடரும் தவறு செய்யவில்லை. பரிகாரம் செய்தவரும் தவறு செய்யவில்லை. இதற்கு என்ன காரணம்?
ஒருவருடைய குண நலன்கள் செயல்பாடுகள் அனைத்தும் அவரவர் விதிப்படி எழுதப்பட்ட கர்மாதான் காரணம். இதில் மூன்று வகையான கர்மா வினைகள் உண்டு. தன்னைச் சார்ந்த தோஷங்களுக்குப் பரிகாரம் என்பது, தெய்வம் சார்ந்த வழிபாடுகள் வகையைச் சார்ந்தவையாகும்.
பரிகாரம் செய்தேன் நல்ல பலன் கிடைத்தது என்றும் . என்னுடைய கஷ்டங்கள் குறைந்து விட்டன என்று கூறுவார்கள். சிலபேர், 'நானும் நிறையப் பரிகாரங்கள் செய்து விட்டேன்.
ஆனால், இன்னும் கஷ்டம் குறையவில்லை என்பார்கள். இது எதனால்? இப்படி நடப்பதற்குக் கர்மவினைகளே காரணம். இந்தக் கர்மாவினைகளில் மூன்று வகைகள் உண்டு.
அவை 'த்ருத கர்மா', தெரிந்தே செய்த பாவம், 'த்ருத அத்ருத கர்மா' தெரிந்தே செய்த தப்பு பின்னர் அதற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது, 'அத்ருத கர்மா' தெரியாமல் செய்த தவறு.
1. த்ருத கர்மா (தெரிந்தே செய்த பாவம்):
இது மிகக் கடுமையான கொடுமையான பாவம் செய்தவர்களின் கர்ம வினை ஆகும். முற்பிறப்பில் பிறருக்குத் துன்பம் தரக்கூடிய குற்றங்களைச் செய்தமையாகும். அதாவது, பிறர் சொத்தை அபகரித்து அவர்களைக் கஷ்டப்படுத்தியது,
பணத்துக்காகக் கொலை செய்தது, தாய் தந்தையரை கவனிக்காமல் அவர்களைத் திண்டாட வைத்தது, அதாவது தெரிந்தே அந்தப் பாவங்களைத் தொடர்ந்து செய்தது.
இதற்கு மன்னிப்பே கிடையாது. இந்த ஜன்மத்தில் என்ன பரிகாரம் செய்தாலும், பலன் இருக்காது. இவர்கள் தன் சந்ததிகள் நன்றாக இருக்க, நிறைய ஏழைகளுக்கு அன்னதானத்தைத் தொடர்ந்து செய்யவேண்டும்.
2. த்ருத அத்ருத கர்மா (தெரிந்தே செய்த தவறு பின்னர் அதற்கு மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது):
சில சமயம் நாம் செய்யும் காரியம் சரியாக இருக்கும் என்று நினைத்து செய்திருப்போம். நல்லவர்களுக்கு செய்ய வேண்டிய உதவியைச் செய்யாமல் விட்டிருப்போம். தீயவர்களுக்கு அவர்களுடைய குணம் அறியாமல் உதவி செய்திருப்போம். ஆனல், அந்தக் காரியம் தவறாக முடிந்திருக்கும். மன்னிக்கக்கூடிய குற்றங்களை, முற்பிறவியில் செய்தவையாகும்.
அதாவது, தெரிந்து செய்த தவறு அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது. இதற்கு இந்த ஜன்மத்தில் ஜாதக ரீதியாக தெய்வப் பரிகாரம் செய்தால், சரியாகி நல்ல பலன் கிடைக்கும். கஷ்டங்கள் தொடர்ந்து வராது.
3. அத்ருத கர்மா (தெரியாமல் செய்த தவறு):
மிகவும் மன்னிக்கக்கூடிய சிறிய குற்றங்கள் தெரியாமல் செய்வது. இதற்குப் பரிகாரங்கள் தேவையில்லை. மனம் வருந்தி கடவுளிடம் செய்யும் வேண்டுதலே போதுமானது.
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .
வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்,
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
WEBSITE: www.ammanastrology.blogspot.com
Contact Numbers:
91 + 8122733328
0 கருத்துகள்:
கருத்துரையிடுக