Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 28 டிசம்பர், 2011

அர்த்த நாரிஸ்வரர் தத்துவம் என்ன?ஜோதிடர் ராவணன் பதில்கள்

சிவ பெருமான் கொண்டருளிய திருமேனிகளில் அர்த்த நாரிஸ்வரர் திருமேனியும் ஒன்று. அர்த்த நாரிஸ்வரர் திரு உருவத்தையே அம்மையப்பர் என்றும் , சிவசக்தி என்றும் கூறுவார்கள். இறைவன் பாதி ஆணாகவும் பாதி பெண்ணாக கொண்ட திருவுருவமே அர்த்த  நாரிஸ்வரர் திருவுருவம். அர்த்த நாரிஸ்வரர் என்பது அர்த்தம் + நாரி + ஈசுவரர் என அமையும்.  
சமஸ்கிருதத்தில் அர்த்தம் என்பதற்கு பாதி என்றும். நாரி என்பதற்கு பெண் என்றும் பொருள். அதாவது ஈஸ்வரன் தன்னுடைய திருவுருவத்தில் பாதி பெண் உருவம் கொண்டவர் என்பது பொருள். இத்திருவுருவம் இறைவனே உலகுக்கும் உலக உயிர்களுக்கும் தாயாகவும், தந்தையாகவும் அம்மையாகவும் அப்பனாகவும் சிவமாகவும் சக்தியாகவும் விளங்குகிறார் என்னும் தத்துவத்தை உணர்த்துகிறது.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்