Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 17 ஏப்ரல், 2018

பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வேண்டுமா ? குடிகார கணவன் திருந்த வேண்டுமா ? கட்டாயம் இதை படியுங்கள் ? ஆன்மீக ஜோதிடர் - அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - ஆர் . இராவணன் BSC

                                                    ஓம் சிவாய நம
என் கணவர் ஒரு குடிகாரர், சூதாடி, கெட்ட பெண்களுடன் சகவாசம், என் மகனும் குடிக்கிறான், தொழிலில், படிப்பில் கவனம் இல்லை, மனைவியை அடிக்கிறான். குழந்தைகள் மீது பாசமில்லை... இப்படி ஒரு புறம். சில வீடுகளில் பெண்கள் வழிதவறி காதல்... அது இதுவென மயக்கத்தில் அலைகிறார்கள். இப்படி இக்காலத்தில் பலரும் நிம்மதியின்றி தவிக்கின்றனர். 

இதற்க்கு காரணம் ஒரு பெண்ணின் ஜாதகத்தில் கணவனை குறிக்க கூடிய லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் சனி பகவான் இருந்தாலும் அல்லது சனிபகவானின் பார்வை இந்த ஏழாம் இடத்துக்கு இருந்து பல தீய கிரகங்களின் தொடர்பும் பெற்று  இருக்குமானால் அந்த பெண்ணுக்கு கணவனால் வாழ்க்கையில் நிம்மதி இல்லாத சூழ் நிலை உண்டாகும் . நிம்மதி  இல்லாத  சூழ் நிலை என்று சொல்லும்  பொழுது கணவன்   குடிகாரனாகவும்  இருக்கலாம் . வேறு ஒரு பெண்ணின் தொடர்பையும் பெற்று இருக்கலாம் . அப்படிபட்ட பட்ட கஷ்டமான சூழ்நிலையை அனுபவிக்கும்    பெண்களுக்கு இதோ ஒரு நல்ல செய்தி. 

ஒரு கணவன் பிற பெண்களை விரும்புபவன், மனைவியும் அதே போல...அழகான ஆண்களை விரும்புவாள். தன் நடத்தைக்கு கணவன் தடையாக இருப்பான் எனக்கருதிய மனைவி அவனைக் கொன்று விட்டு தகாத செயல்களைத் தடையின்றி நடத்தினாள். ஒரு கட்டத்தில் அவளும் இறந்தாள்.


மறுபிறப்பில் கணவன் பருந்தாகவும், மனைவி கிளியாகவும் பிறந்தனர். ஒருமுறை கிளியைப் பார்த்தது பருந்து. அப்போது முற்பிறவி நினைவுக்கு வர, தன்னைக் கொன்ற கிளியைக் கடித்து குதறியது. கிளி, அங்கு தலைகீழாக கவிழ்ந்து கிடந்த ஒரு மண்டை ஓட்டில் இருந்த நீரில் போய் விழுந்து இறந்தது. அதே சமயம், ஒரு வேடன் பருந்தின் மீது அம்பு எய்ய, அதுவும் அதே மண்டை ஓட்டில் விழ, அதிலிருந்த தண்ணீர் அதன் மேல் தெறித்தது. அந்த ஜீவன்கள் எமதர்மனால் வைகுண்டம் அனுப்பப்பட்டனர்.  

தாங்கள் தகாத செயல் செய்தும், தங்களை வைகுண்டம் அனுப்பக் காரணம் என்ன என்று எமனிடம் அந்த ஜீவன்கள் கேட்டன. குழந்தைகளே! நீங்கள் விழுந்தது சாதாரண மண்டை ஓடு அல்ல. வடர் என்ற ரிஷியினுடையது. அவர் கண்ணன் சொன்ன கீதை ஸ்லோகங்களைத் தவறாமல் படிப்பவர். அந்த ஸ்லோகங்களில் ஒன்றைச் சொன்னால் கூட, பாவச்செயல் செய்வோரும் திருந்தி விடுவார்கள். அது மட்டுமல்ல, கெட்ட வழக்கங்களும் அவர்களை அண்டாது, என்றார் எமதர்மன். அந்த ஸ்லோகத்தின் தமிழாக்கம் இது தான். 

தவறாமல் படியுங்கள். உங்கள் வீட்டிற்கும் விமோசனம் கிடைக்கும். 

உடம்பையே வெற்றி கொள்வோன்
மனத்தாலும் துறவியாகி திடமுற 
எதையும் செய்யாது அமைகுவன் 
பிறரைச் செய்ய விட அவன் முயலான் 
ஒன்பான் வாசலை உடைய 
தேகப்  படலம் தன்னில்
நல்ல சுகமுடன் வாழுவானே!

இந்த சுலோகத்தை பூஜை அறையில் பய பக்தி உடன் தினமும்  உச்சரித்து வர  உங்களின் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும். 

மேலும் கணவன் மனைவி இருவரின் பெயர் அமைப்புகளையும் நன்கு ஆராய்ந்து அவர்கள் இருவரின் பெயரையும் அதிர்ஷ்ட பெயர் அமைப்பு முறைப்படி திர்ஷ்டமான முறையில் திருத்தம் செய்து அந்த பெயரை தினமும் பூஜை அறையில் அமர்ந்து எழுதி மேலே சொன்ன சுலோகத்தையும் கூறி  வர குடிகார கணவன் திருந்தவும் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும்   உடனடியா பலன் கிடைக்கும் . 
உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதமாகும் நிலையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? உங்கள் நிறுவனத்துக்கு அதிஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? வெளிநாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? பதவி உயர்வு கிடைக்க வில்லையா? திருமணமாகி குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையா? தீராத கடன் பிரச்சனையா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? இதற்க்கு காரணம் உங்களின் ஜாதக அமைப்புக்கும் - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண்  - பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் - இவைகளுக்கு ஒத்து வராத தீமை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் அமைந்திருக்கலாம். கவலையே வேண்டாம். உங்களின் ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்து -  உங்களின் பிறந்த தேதிக்கும் -  பிறந்த தேதியின் கூட்டு எண்  - ஹீப்ரு எண்  - இவற்றிற்கு ஏற்றார் போல் நல்ல பலன்களை தரக்கூடிய கிரகத்தின் ஆதிக்க எண்ணில் உங்களின் பெயரின் கூட்டு எண்கள் வருமாறு மிகவும் அதிஷ்டகரமான முறையில் உங்களின் பெயரை அமைத்து வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் பெற ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழி காட்டுகிறோம்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328


 
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்