Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 17 ஜனவரி, 2018

இன்று 17 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் ஹீப்ரு பிரமிடு எண்ணும் - எதிர்கால பலன்களும் ? அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் - அதிர்ஷ்ட எண் கணித நிபுணர் - ஆர். இராவணன் BSC

                                                தாயே பூமாதேவி
இன்று 17 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 49. இது ராகுவின் ஆதிக்க எண்ணாகும் . ராகு - செவ்வாய் - இரண்டு ஆதிக்க எண்கள் இணைந்து மறுபடியும் ராகுவின் 4 ம் எண் ஆதிக்கத்தை உணர்த்துகிறது . 

பிரதான திக்குகள் 4. வேதங்கள் 4. புருஷாத்ரங்கள் 4. வாகன சக்கரங்கள் 4. மனம் சித்தி புத்தி அஹங்காரம் 4. ஸ்ரீசக்கரத்தில் சிவகோணம் 4.  என்ற தத்துவத்தை இந்த எண் உணர்த்துகிறது .

எகிப்திய சித்திரங்களில் ஒன்பது விதமான கோப்பைகளுடன் ஒரு மனிதன் இருப்பதை போன்ற சித்திரம் இந்த 49 எண்ணோடு தொடர்பு பெற்று காணப்படுகிறது . " கருணை புதையலை அறியும் பார்வை என சாஸ்திரம் கூறுகிறது . 



"ஸர்வ ஜெயம் . நிதி தரிசனம் எட்டு விதமான கண்ணோட்டம் என்றெல்லாம் மந்திர நூல் இந்த எண் பற்றி வருணிக்கிறது . 

அஷ்ட திருஷ்டியும் சுபமங்களமும் ஆழமான கருணை பேராற்றலும் கலந்த எண்ணை பெயரில் உடையவர்கள் . கருணா மூர்த்தியாகவும் வெற்றி பார்வையாளர்களாகவும் இருப்பார்கள் .தனலாபம் பாதுகாப்பு கூட்டு முயற்சிகளில் வெற்றி சிறந்த ஆன்மீக தன்மை புதையல் யோகம் திரவப்பொருள்கள் அல்லது கடல் கடந்த வாணிபத்தால் செல்வச் செழிப்பு ஆகியவை உண்டாகும் . உயர்ந்த மனிதர்களின் ஆதரவு அனைத்தும் இன்று பிறந்த குழந்தைகளின் எதிர்காலத்தில் உண்டாகும் . 

மனோபலமும் அடுத்தவர் யோசிப்பதை யூகிக்கும் உள்ள இவர்கள் பொறுமையுடனும் விடா முயற்சி கொண்டால் வெற்றி பெறலாம் . 



பல மக்களுக்கு தலைவனாகவும் வழிகாட்டியாகவும் வீர தீர செயல்களால் புகழும் சொல்வாக்கால் -  செல்வாக்கும் உண்டாகும் . அருவி நீர்போல் செல்வப்பெருக்கு 49 ம் எண்ணில் பெயர் கொண்ட நிறுவனங்களுக்கு உண்டாகும் . பல இடங்களை சுற்றி பார்க்கும் பாக்கியமும் அபூர்வ அனுபவங்களும் நிலையான சொத்துக்களும் இந்த எண்ணினருக்கு உண்டாகும் . 

இன்று 17 - 1 - 2018 - ல் பிறந்த குழந்தைகளின் பிறந்த தேதியின் ஹீப்ரு பிரமிடு எண் 49 ம் எண்ணுக்குரிய பலன்கள் இவைகள் என்றாலும் - பிறந்த தேதி 1 10 19 28 ஆகவும்  பிறந்த தேதியின் கூட்டு எண் 1 கவும் வருபவர்களுக்கு இந்த 49 ம் எண் பெயர் எண்ணாக வந்து பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் 19 37 46 க வருமாறு வைத்துக்கொண்டால் மேலே சொன்ன அனைத்து நற்பலன்களும் ஏற்படும் . 


மற்ற எண் காரர்கள் இந்த 49 ம் எண்ணில் பெயர் அமைந்தால் மற்றறவர்களால் வீண் குழப்பங்களும் விபத்துகளும் மற்ற மனிதர்களால் வெறுத்து ஒதுக்கப்படுத்தலும் கோரமான முடிவுகளும் வீண் அபாய கற்பனைகளை தரும் எண் என்பதால் அவ்வளவு சிறப்பான   எண்ணாக தெரியவில்லை . 

ஆதலால் இன்று பிறந்த குழந்தைகளுக்கு பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - பிறந்த ஜாதகம் இவற்றை நன்கு பரிசீலனை செய்து அதிர்ஷ்ட முறையில் பெயரை தேர்வு செய்து குழந்தைக்கு சூட்டினால்  எதிர்காலத்தில் குழந்தை அபாயகரமான சூழ் நிலைகளில் இருந்து தப்பிக்கலாம் .


                                                    அதிர்ஷ்ட மானவைகள் :
அதிர்ஷ்ட திசை -  கிழக்கு 
அதிர்ஷ்ட வர்ணம் - மஞ்சள் 
அதிர்ஷ்ட ரத்தினம் - வெளிரான நீலநிற கல் - கோமேதகம் 
அதிர்ஷ்ட கிழமை - ஞாயிறு  திங்கள் 
அதிர்ஷ்ட தேதி -  4 13 22 31 1 10 19 29 11 20
அதிர்ஷ்ட உலோகம் - தாமிரம் - வெள்ளி 
அதிர்ஷ்ட தெய்வ வழிபாடு - மஹாகணபதி 
அதிர்ஷ்ட  ஆரம்ப எழுத்து - D - M -  T - A  -I - J - B - K - R .


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்