Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 25 செப்டம்பர், 2015

தண்டுவட பாதிப்பை போக்கும் பாதாளேஸ்வரர்? ஆன்மீக ஜோதிடர் – அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் – ராவணன் BSC

0 கருத்துகள்

பஞ்ச ஆரண்ய தலங்களாக திருக்கருக்காவூர், அவளிவநல்லூர், அரித்துவாரமங்கலம், ஆலங்குடி, திருக்கொள்ளம்புதூர் போன்றவை விளங்குகின்றன. ஆரண்யம் என்றால் காடு. இந்த ஐந்து தலங்களையும் ஒரேநாளில் உசாக்காலம், காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்த சாமபூஜை ஆகிய பூஜைகாலத்தில் ஒரே நாளில் தொழுதால், இந்த கலியுகத்தில், எப்படிப்பட்ட கோள்கள் எந்த நிலையில் நின்று எத்தனை தோஷங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் அவை பலனற்றுப்போய் பெருநன்மையே விளையும் என்கின்றார்பதஞ்சலியோகி எனுஞ் சித்தர். அதில் அரித்துவாரமங்கலம் மிகவும் சிறப்புடையதாகும்.

‘‘
கோளின் நாட்டமென்ன
தசை தோசமென வாயிரம்பீடை
கொண்டவருமின்புற்றே யினிது
தனவந்தனாய் வாழ்வர் வையத்து
கருகிலுசாவும் யவளிவத்து
சந்தியுந்த துவாரமங்கலத்துச் சியென
குடிரட்சை கொள்ளச் சாமத்தே
யீசனை யேக திதி தொழுவாரே’’


என்றார். பஞ்ச ஆரண்ய க்ஷேத்ரத்தில் அதிமுக்கியமான க்ஷேத்ரம் இது. ‘‘புண்ணியமுடையோரே படிமிதிப்ப’’ என்ற கருவூர்ச் சித்தர் தம் மொழியில் இருந்து இத்திருக்கோயிலின் படியை மிதிக்க மாபெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டுமென அறிய முடிகின்றது. அரித்துவாரமங்கலநாதனை தொழுதால் போதும் என்றார் கமலநாயனார் என்னுஞ் சித்தர்.

‘’
ஹரி நாராணனை அரித்தாரஞ்
சென்றேத்த வல்லாரல்லார்
வணங்கி மங்கலத்தே சாஞ்செய
பிறவிபிணி யகலுமல்லால் அரிய
வனருளுஞ்சேர வறுமை
விலகுமே - திண்ணம் சொன்னோம்’’


-
என்றார்

‘‘
அரூபமாகி நவநாயகரிருப்ப
சிவனே சீருடை கோளா
யிருந்து அருளாசி யீவனே...’’


என்றார் மூலர். இத்திருக்கோயிலில் நவகிரகங்கள் ரூபவடிவில் இல்லாது அரூபமாக இருப்பதினால் சிவனே ஈண்டு நவகிரகமாய் அருள்பாலிப்பதாய் கொண்டு ஆராதிக்க வேணும் என்பதாம்.

 


‘‘பாதாள வரதனே பண்டை
வினையறுப்பான் - தண்டு
பீடையறுத்து வானந்தமூட்டுவானே’’


முன்னை பிறவியில் செய்த தீவினை தம்மை முழுதும் வேறுடன் கலைவான். மூலவர் பாதாள வரதன், முதுகு தண்டுவட பீடை இருப்போர் இத்திருத்தலம் தொழ பீடை நீங்கி சுகம் காணலாம். இது அனுபவ பூர்வமான உண்மையும் ஆகும்.

‘‘
அரதை பெரும் பாழி யுறைவான்
பாதாளவீகன் நாரணத்கீ    டாம்
வாயுள் பலமுடனே செல்வமுங்
குறைவின்றி தருவான் கடக
மதி காணா நாள் தொழுவார்க்கே’’


என்றார் கோரக்கர் எனும் சித்தர். அரதை பெரும்பாழி என்னும் பெயர் அரித்துவாரமங்கலத்தை குறிக்கும் புராண பெயர் ஆகும். நாராயணனாம் திருமாலுக்கு சமமான இறைவன் - இவரை ஆடி அமாவாசையில் முயன்று தொழுவார் நீண்ட ஆயுளும் வற்றாத செல்வமும் பெறுவர் என்பது உறுதி. மூலவர் பாதாளேஸ்வரர் சந்நதியில் பெரும் பள்ளம் இன்றும் உண்டு. திருமால் வராக அவதாரம் எடுத்து சிவபெருமானின் அடியை - திருவடியை காண பூமியை தோண்டிய இடமிது என்றார் ராமதேவர்.

‘‘
மாயப் பன்றியாயன்று
பாரகங் கீண்ட பெரும்வாழி
யீசனடி கண்டுய்ந்தோமே’’


என்றார் சித்தர். சிவனின் சேவடியை போற்றி தொழ திருமகள் கடாட்சம் கிட்டும் என்றார் உரோமர் எனும் சித்தர்.

‘‘
வராகக் கொம்பணிந்த மார்பனாந்
சிவனார் திருவடி யெண்ணி
தொழுவார் எத்துனை தூரித்ர்ய
வானாயினுங் கிட்டுமா தனமே’’


என்றார் பாதாள ஈஸ்வரர். ஆதி வராகத்தின் கொம்பில் ஒன்றை அன்பால் வாங்கி தன் மணிமார்பில் தரித்துள்ளார். இவருடைய திருவடியை தொழுபவர் எத்துைன வறுமையில் துன்புற்று நிற்பினும் கண்டிப்பாக செல்வந்தர் ஆவர் தப்பாதே என்பது சித்தர் தம் வாக்கு.

 



‘‘கடனுபாதைக்கு விடிவாவான்
காசினியில் கன்றொரு மனை
சதுர் போகமு மீவானொன்றும்
பொய்யிலை...’’


என்றார் அகப்பேய் சித்தர். கடன் உபாதைகளை முற்றிலும் கலைந்து சதுர் போகமார் ரத, கஜ, துரக பதாதி யோகமுந் தந்து நிற்பான் என்பது சித்தர் தம் சித்தம்.

‘‘
சப்த கணபதியை கைதொழ
கல்வி வாயுமே - கண்ட
தோசமகளுமே காசினியில்
சாகமே கண்டுய்யலாகுமே’’


என்றார் பொய்யாமொழியார். இத்திருத்தலத்தில் ஏழு கணபதிகள் அருள்பாலிக்கின்றனர். இவரைத் தொழ கல்வி விருத்தியடைவர் குழந்தைகள் - நான்காம் பிறை, எட்டாம் பிறை, பன்னிரெண்டாம் பிறை போன்றவை கண்ட தோஷம் அகலும். நாய் தண்ணீர் அருந்துவதைக் கண்ட தோஷம் - விலங்குகள் புணர்வதை கண்ட தோஷம் - பட்சி தோஷம் உள்ளிட்ட நூற்றியெட்டு தோஷமகல கருவாய் விளங்கும் என்றார் சித்தர். தோஷங்கள் தீர்ந்தால் சுகம் தானே. தாழம்பூ பொய்யுறைத்தது இத்தலத்தில்தான். எனவே பொய் சத்தியம் செய்தோர் பொய் சாட்சி சொன்னோர் தொழுது பாவ விமோசனம் பெற வேண்டிய புண்ணிய சேத்திரமது.

திருவடியை தரிசிக்க, மகாவிஷ்ணு இத்தலத்தில்தான் துவாரமிட்டு திருவடி தரிசனம் தேடி தோற்றார். எனவே ஹரி (விஷ்ணு) துவார (பூமியை துளையிடுதல்) மங்கலம் (ஊர்) அரித்துவாரமங்கலம் ஆனது. சுயம்பு மூர்த்தியோடு அலங்கார நாயகியாம் அம்பிகையையும், தல தீர்த்தமாம் பிரம்ம தீர்த்தத்தில் முழுகி தொழுதெழ புற்று நோய் போன்ற கொடிய நோய்கள் ஒட்டாது என்றார் போகர்



வலங்காரத்தாளோடு பாதாள சிவனையுமே
பிரம்ம பொய்கை புக்கு கொண்டாடுவார்
கும்ப சதுர்தசியாயின் பெரும் பாடகலுமே’’


என்றார் போகர் மகாசிவராத்திரியில் தொழ மேன்மை சேரும். கும்பகோணம், தஞ்சாவூர் என்று இருவழிகளிலும் இத்தலத்தை அடையலாம். கும்பகோணத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.


உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் . 

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் . 


தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி : 
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc 
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா .
WEBSITE: www.ammanastrology.blogspot.com 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com 
Contact Numbers: 91 + 8122733328
Continue reading >>

சமீபத்திய கருத்துகள்