Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2015

ஆரோக்கியமாக இருக்க அவரவர் ஜாதக அமைப்பும் ஒரு காரணமா? அதற்கான பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள் ? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் . ராவணன் BSC

0 கருத்துகள்
                            ஓம் நம சிவாய  
ஒருவர் நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமா இருக்க வேண்டுமானால் அவர்களுடைய ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு ஆறாம் இடம் - ஆறாம் இடத்து அதிபதி இவர்களின் தொடர்பு இல்லாமல் இருக்க வேண்டும் . லக்னாதிபதி ஆறாம் இடத்தில் அமர்ந்து விட்டால் அவர்களுக்கு நோயை பற்றிய பயம் அதிகமாக இருக்கும் 

மேலும்  லக்னாதிபதி ஆறாம் இடத்தில் அமர்ந்து லக்னாதிபதிக்கு ஆறாம் இடத்து அதிபதியுடன் தொடர்பு ஏற்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு அவர்களுக்கு உடலில் நிரந்தரமான வியாதி இருந்து கொண்டே இருக்கும் . லக்னாதிபதிக்கு சுப கிரகங்களின் பார்வை இருந்தால் அவருக்கு பாதிப்பு ஏற்படாது . 

மேலும் உடல் நலக்காரன் என்று சொல்ல கூடிய சூரிய பகவான் அவர்களுடைய ஜாதகத்தில்  லக்னத்துக்கு செழிப்பான  இடங்களில் இருந்துவிட்டால் அவர் எப்பொழுதும் ஆரோக்கியமான ஜாதகர்தான் . சூரியன் பாதிக்கப்பட்டு இருந்தால் கடைசிவரை அவர் உடல் நலனில் தீராத குறை இருந்து கொண்டே இருக்கும் . 

மேலும் நவக்கிரகங்களில் தலைமை வகிப்பவர் சூரியன். இவருக்குரிய ஞாயிறு, சப்தமி திதியில் சூரியமந்திரம் சொல்லி வழிபட்டால் ஆரோக்கியம் மேம்படும். வியாசரால் இயற்றப்பட்ட இந்த மந்திரம் பாவத்தைப் போக்கும் சக்தி மிக்கது. தினமும் நீராடியபின், கிழக்கு நோக்கி நின்று இதை 12 முறை ஜெபித்து வர எல்லா நன்மையும் உண்டாகும். 

ஜபாகு சும சங்காஸம்
காஸ்ய பேயம் மகாத்யுதிம்
தமோரிம் சர்வ பாபக்னம்
ப்ரண தோஸ்மி திவாகரம்

பொருள்: காஸ்யப முனிவரின் மகனாக அவதரித்தவரே! செம்பருத்தி மலர் போல சிவந்த மேனி கொண்டவரே! பேரொளி உடையவரே! தரிசிப்பவரின் பாவச்சுமையை சுட்டெரிப்பவரே! இருளின் பகைவரே! சூரியதேவரே! உம்மைப் போற்றுகிறேன்.  

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம்
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
WEBSITE: ammanastrology.blogspot.com
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
 



Continue reading >>

சமீபத்திய கருத்துகள்