Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

வெள்ளி, 23 டிசம்பர், 2011

தோல் வியாதியை உண்டாக்கும் கிரக அமைப்புகள் ஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ளதா?

ஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒன்பது வகையான ஒவ்வொரு கிரகமும் மனித உடலில் மனித உடல் உறுப்பில் ஒவ்வொரு பகுதியையும் ஆட்சி செய்கிறது. இதில் சந்திரன் மனித உடலில் தோல் பகுதியை ஆட்சி செய்கிறது.தோலை  ஆங்கிலத்தில் SKIN  என்று அழைப்பர். SKIN  என்று ஆங்கிலத்தில் எழுதி  நியூமராலாஜி படி (எண் கணித ஜோதிடத்தில்   ஒவ்வொரு எழுத்துக்கும்  கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு எண்ணை கொடுத்து  மொத்தமாக கூட்டும்போது SKIN ( 3 2 1  5 = 11 =2 ) தோல் பகுதியை ஆட்சி செய்யும் சந்திரனின் ஆதிக்க எண் 2 என்று வரும். எனவே ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் பாதிக்க படுவது தோல் வியாதியை உருவாக்கும்.  மனித உடலில் தோல்வியாதி உண்டாக கீழ்கண்ட கிரக அமைப்புகள் காரணமாகின்றன. 
லக்னாதிபதி பலம் இல்லாமல், ஆறு, எட்டு, பன்னிரண்டு போன்ற இடங்களில் இருப்பது.  
தோல் பகுதியை ஆட்சி செய்யும் சந்திரனை சுற்றி பாவ கிரகங்கள் இருப்பது.  
தோல் பகுதியை ஆட்சி செய்யும் சந்திரனை சனி பகவான் பார்ப்பது.  
லக்னத்துக்கு ஆறாம் வீட்டுக்கு  அதிபதி , சந்திரனை பார்ப்பது. 
லக்னத்துக்கு ஆறாம் வீட்டுக்கு அதிபதி, லக்னாதிபதியை பார்ப்பது.  
லக்னாதிபதியையும்  , சந்திரனையும் சனி பகவான்  பார்ப்பது.   
மேலும் தொழு நோய் என்பது தோலோடு தொடர்புடைய ஒரு உச்சக்கட்ட வியாதியாகும். இந்த நோயை ஆங்கிலத்தில் LEPROSY  என்று சொல்வார்கள்.   
இந்த LEPROSY என்ற சொல்லின் ஆங்கில எழுத்துக்களின் மொத்த கூட்டு எழுத்து LEPROSY (3 5 8 2 7 3 1 = 29 =  2 ) என்று வருவதை கவனிக்கவும். இந்த இருபத்து ஒன்பது என்ற எண்ணை கவனிக்கவும். தோல் பகுதியை ஆட்சி செய்யும் சந்திரனை குறிக்கும் . 2ம்  எண்ணோடு சந்திரனுக்கு பரம பகையான செவ்வாயை குறிக்கும்   எண் வருகிறது. ஒரு மனிதனின் பெயரின் மொத்த கூட்டு எண்களின் எண்ணிக்கை  29  என்று வரவே கூடாது.காரணம் 2 ம் எண் என்பது சாந்த குணத்தையும் 9 ம் எண் என்பது போர் குணத்தையும் கொண்டது.  
அப்படி பார்க்கையில் 2 ம் எண் 9 ம் எண்ணுடன் இணையும் பொழுது தன்னுடைய வலிமையை இழந்து விடுகிறது. மனித உடலில் தோல் பகுதியை ஆட்சி செய்யும் சந்திரன் தன்னுடைய வலிமையை இழக்கும்போது தோல் சம்பந்தமான வியாதிகள் உருவாவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது. அதனால் பெயரின் கூட்டு எண்ணாக 29 பெற்றவர்களுக்கும் தோல் சம்பந்தமான வியாதிகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால் பெயரின் கூட்டு  எண்ணை  அதிர்ஷ்ட எண்ணில் வரும்படி அமைத்து கொள்ளவும்.  
மேலே சொன்ன கிரக அமைப்புகளும் பெயரின் கூட்டு எண்களும் தோல் வியாதியை உருவாக்குவதற்கு காரணமாக இருந்தாலும். ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்தையோ லக்னாதிபதியையோ குரு பகவான் பார்த்தால் அவன் நோய் நொடி இல்லாமல் ஆரோக்யத்துடன் வாழ்வான். 
  
தோல் நோயை தீர்க்கும் மந்திரம்.  

அஷ்ட மூர்த்தே ரதிஷ்டான 
க்ருபயா வ்ருஷப த்வஜ
த்வக் தோஷ ஜனிதம் பாபம் 
மண்டலான் யாத வாஹர 
பார்வதீ நாத சர்வ சஹா       
அவரவர் வணங்கும் கடவுளை மனதில்  தியானித்து  இந்த மந்திரத்தை மனதில் நம்பிக்கையுடன் தினமும் 108 முறை சொல்ல தோல் நோய் குணமாகும்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்