Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

புதன், 28 டிசம்பர், 2011

2012 ஆங்கில புத்தாண்டு மிதுன ராசி பலன்கள்
வாசித்து கொண்டு இருக்கும் பக்கம்  மாறும்  பொழுது  மாறும் பக்கத்தின் மேல் பகுதியில் இருக்கும்  SKIP AD  என்ற வார்த்தையை  கிளிக் செய்யவும். 
 
மிதுனம்
மிருகசீரிஷம் -  3  , 4 ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1 ,2 , 3 ஆம் நட்சத்திர பாதங்களில் மிதுன இராசியில் பிறந்தவர்களுக்கு ……. 
ஜனவரி
மாத ஆரம்பத்தில் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு காணப்படும். பிள்ளைகள் வழியில் தொல்லைகளும் பிரச்சினைகளும் ஏற்படும். உங்களது பிள்ளைகளுக்கும் தாய்க்கும் இடையே நடக்கும் பிரச்சினைகளில் நீங்கள் தலையிட்டு சுமூகமாக முடித்து வைப்பீர்கள். இருப்பினும் சில விஷயங்களில் பாலைப் பார்ப்பதா? பானையைப் பார்ப்பதா என்ற நிலையும்,“”பூனைக்குத் தோழன் பாலுக்கும் காவல்’ என்ற முறையிலும் தத்தளிப்பீர்கள். இருப்பினும் மனைவிக்குப் பரிந்தே நீங்களும் பேசுவீர்கள். செயல்படுவீர்கள். மாதப் பின்பகுதியில் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். வியாபாரத்தில் அனுகூலமான நிலை ஏற்படும்.
பிப்ரவரி
உங்களது புகழ், கீர்த்தி, கவுரவம் ஆகியவற்றில் எந்த விதக் குறையும் இல்லை. கோவில் விசேஷங்கள் அல்லது அன்னதானக் குழு இவற்றில் கவுரவ ஆலோசகர்கள் பதவியும் அல்லது கோவில் நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பேற்கவும் சூழ்நிலைகள் அமையும். முன்பைவிட சுறுசுறுப்பாக இருப்பீர்கள். ஆனால் எந்த ஒரு செயலையும் விரைவாக முடிக்க முடியாமல் ஏதோ ஒரு தடை இருப்பதுபோல் தோன்றும். எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். அவ்வப்போது உடல் அசதியும் சேர்ந்துகொள்ளும். அடிக்கடி டாக்டரிடம் செல்லும் சூழ்நிலை உண்டாகும். உடல்நிலை பெரிய அளவில் பாதிக்காது.
மார்ச்
மாணவர்களுக்கு கல்வியைப் பொறுத்தவரை அவ்வளவு சிறப்பானதாகத் தற்சமயம் தெரியவில்லை. கேளிக்கை, பொழுது போக்கு, விளையாட்டு அம்சங்களில்தான் சிந்தனை செல்லும். ஆடை, ஆபரணங்கள் போன்றவற்றை வாங்கும் யோகமும் அதற்காகக் கடன் வாங்கும் சூழ்நிலையும் தவிர்க்க முடியாதவையாக அமையும். நண்பர்கள் மூலம் உதவியும் ஆதாயமும் ஏற்படும். கலைத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல மாற்றங்கள் காணப்படும். வெற்றி மேல் வெற்றியும் கிட்டும். மூத்த சகோதர வகையில் நன்மை கிடைக்கும். சிலருக்கு அவர்கள் மூலம் தொழில் அமையும்.
ஏப்ரல்
கணவன்- மனைவி உறவைப் பொறுத்த வரையில் மிகவும் இணக்கமாக இருக்கும். ஒற்றுமை அதிகரிக்கும். இளைய சகோதரன், சகோதரி வகை உறவிலும் நன்மை ஏற்படும். திருமணமாகாமல் தாமத நிலை அடைந்த இளைஞர்களுக்கு திருமண வாய்ப்பு கைகூடி வரும். ஸ்பெகுலேஷன் மூலம் திடீர் தனவரவு ஏற்படும். தந்தையின் உறவில் விரிசல் ஏற்படும். ஆனால் தாயாரின் உடல் நலம் நல்லமுறையில் இருக்கும். தாய், தந்தையரை விட்டுத் தனியாகச் செல்லும் சூழ்நிலையும் உருவாகலாம். உங்களுடைய உடல்நலனில் சிறு சிறு தொந்தரவுகள் ஏற்படும். பயம் தேவையில்லை.
மே
மாமனார் வகையில் சகாயம் ஏற்படும். பணவரவும் உதவியும் ஏற்படும். தொழில் துறையைப் பொறுத்தவரையில் அரசுப் பணியில் இடமாற்றம் ஏற்படும். தனியார் துறையில் பதவி உயர்வு ஏற்படும். வாகனம் வைத்திருப்போருக்கு செலவினங்களை அதிகப்படுத்தும். வீடு, நிலம் போன்றவற்றில் தந்தையுடன் சொத்து விவகாரம் கோர்ட் கேஸ் என இழுபறியாகும். சிலபேருக்கு புதிய கடன்கள் ஏற்படும். அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எச்சரிக்கை தேவை. ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள், கலைத்துறையினர் இவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும்.
ஜூன்
மனக் குழப்பம் மிகுந்து காணப்படும். கடன் தொல்லைகள் சற்று நெருக்கக் கூடும். கொடுக்கல்- வாங்கலில் சோதனை ஏற்படும். மூத்த சகோதர வகையில் தங்களுக்கு செலவினங்கள் ஏற்படும். உறவினர்களின் போக்கு சகஜமாகவே காணப்படுகிறது. கடிதப் போக்குவரத்தால் நல்ல தகவல்களும் திருப்தியும் ஏற்படும். பிற்பகுதியில் பணவரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்களால் நன்மையும் ஆதாயமும் ஏற்படும். சில பிரச்சினைகளில் அவர்களின் உதவி கொண்டு சுமூகமாகத் தீர்வு காணமுடியும்.
ஜூலை
மிகவும் கலகலப்பான மாதமாக அமையும். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக இயங்கும். வாகனம் வாங்க முயற்சிப்பவர்களுக்கு இது நல்ல திருப்பமான நேரமாக இருக்கும். வீடு, நிலம் போன்றவை திருப்திகரமாக இருக்கும். உல்லாச கேளிக்கைகளில் அதிகமான நாட்டம் கொள்வீர்கள். சகோதரருக்கு திருமண ஆயத்தங்கள் நடைபெறும். வெகு சீக்கிரத்தில் திருமணம் கைகூடும். தொழில் துறையை விரிவாக்க புதிய கடன்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு அனுகூலமான நிலை உருவாகும்.
ஆகஸ்ட்
மாத ஆரம்பத்தில் அகால போஜனமும் அதிக அலைச்சலும் காணப்படும். உடல் நலம் சற்று பாதிக்கப்படலாம். மனைவியின் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். பணவரவு சற்று கடினமாக இருக்கும். அதிக குடும்பச் செலவு உண்டாகி மனக்கஷ்டத்தைத் தரும். யாருக்கும் இப்போது பணம் சம்பந்தமாக வாக்கு தருதல் வேண்டாம். வெளியூர் பயணங்களை சற்று தள்ளிப் போடுவது நல்லது. போட்டி, பந்தயங்களில் சாதகமான முடிவுகள் தென்படவில்லை. ஒருசிலர் பழைய வாகனங்களை விற்று புதிய வாகனம் வாங்க முயற்சிகள் செய்யலாம். பணப் பற்றாக்குறைக்கு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
செப்டம்பர்
உங்கள் வாழ்க்கையில் தொழில் அடிப்டையில் பலமான அஸ்திவாரத்தை ஏற்படுத்த கடும் முயற்சிகளை எடுப்பீர்கள். அந்த முயற்சிகள் நல்ல முறையில் வெற்றி பெறும். அதே போல் வீடு, மனை அமைப்பிலும் புதிய இடமாற்றம் ஏற்படும். வீடு, மனை போன்றவற்றைப் புதுப்பித்தல் வகையில் சுப விரயம் ஏற்படும். அதற்காகப் புதிய கடன்களை ஏற்படுத்தும் நிலை! கடனில்லாமல் வாழ்வு இல்லை என்ற அடிப்படையில் வாழ்க்கை நகர்ந்து கொண்டு செல்லும். தொழில் அடிப்படையில் புதிய கூட்டு முயற்சியும் பலனளிக்கும்.
அக்டோபர்
கணவன்- மனைவி உறவைப் பொறுத்த வரையில் ஊடல் பின் கூடல் என மிக நெருக்கமாக இருக்கும். தாய்மாமன் வகையில் எதிர்பாராத பணவரவு அல்லது சொத்து வரவுகள் இருக்கும். தகப்பனாரின் உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். தகப்பனார் வழியில் விரயம் ஏற்படும். உங்களுடைய உடல் நிலையில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால் அடிக்கடி மன உளைச்சலால் வீண் கற்பனையை ஏற்படுத்தி வருந்துவீர்கள். மனதை ஒரு நிலைப்படுத்த தியானம், தெய்வ வழிபாடு போன்றவற்றை மேற்கொண்டால் நல்லது. ஆன்மிக பெரியவர்கள் தொடர்பும் ஆசியும் கிடைக்கும்.
நவம்பர்
இது வரையில் நடந்த பலன்கள் சாதகமும் இல்லை பாதகமும் இல்லை. இரண்டும் கலந்த “மிக்சர்-அவியல்’ பலனாகத்தான் நடந்தது. ஒரு சிலருக்கு சில வகைகளில் சாதகங்கள், சில நன்மைகள் நடைபெற்றாலும் சில விஷயங்களில் சில சங்கடமான சூழ்நிலைகளே நடந்தன. இனி பொருளாதாரத்தில், வியாபாரத்தில், தொழில்துறையில், உத்தியோகத்தில் நல்ல வருமானத்தைக் கொடுத்து நல்ல பலன்கள் நடைபெற்றாலும், தன் சுகத்தையும் அல்லது மனைவியின் தேகசுகத்தையும் பாதிக்கும் பலனாக நடைபெறும்.
டிசம்பர்
கடந்த காலத்தில் முறையான வருமானம் இல்லாமல் வாக்கு சாதுர்யத்தாலும், புத்தி சாதுர்யத்தாலும் “ஆட்டைத் தூக்கி குட்டியிலே போட்டு குட்டியைத் தூக்கி ஆட்டிலே போட்டு’ போன்ற மேஜிக் விளையாடி, அக்கம் பக்கத்தார்கள் ஆச்சரியப்படும் படி வெள்ளையும் சொள்ளையுமாக வறட்டுக் கவுரவத்தோடு வாழ்ந்தவர்கள், வெளித் தோற்றத்தில் சிரித்தாலும் உள்ளுக்குள் கண்ணீர் வடித்த நிலை மாறி நல்ல திருப்பத்தை ஏற்படுத்தும்! தொழில் துறையிலும் வியாபாரத்திலும் அபிவிருத்தியும் லாபமும் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் நல்ல முறையில் காணப்படும்.
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்