Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 22 அக்டோபர், 2011

திருமணத்தடை நீங்க வெள்ளைப்புடவை வழிபாடு? ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

0 கருத்துகள்


திருமணத்தடை நீங்க அம்மனுக்கு வெள்ளை வஸ்திரம் சாத்தி வழிபடும் வாஸ்துநாதர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டம் திருப்புகலூரில் உள்ளது.

தல வரலாறு: ஒரு முறை வாயு, வருணன், அக்னி ஆகிய மூவருக்கும் இடையே தர்க்கம் ஏற்பட்டதில் அக்னி பகவான் மறைந்து போனார். இதனால் உலகில் யாகம் முதலியன நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. நைவேத்யம் உள்ளிட்ட அனைத்தும் நின்று போயின. மிகுந்த துன்பத்திற்குள்ளான முனிவர்களும், தேவர்களும் இதிலிருந்து விடுபட லிங்க பூஜை செய்தனர். 

அவரது உத்தரவுப்படி அக்னி பகவான் மீண்டும் வந்தார். அவருக்கு இரண்டு முகம், மூன்று பாதம், நான்கு கொம்பு, ஏழு கை, ஏழு ஜூவாலையுடன் சிவன் ஒரு உருவத்தையும் படைத்தார். அக்னி பகவானுக்கு அனுக்கிரகம் செய்ததால் இறைவனுக்கு "அக்னீஸ்வர சுவாமி' என்ற பெயர் ஏற்பட்டது. சரண்ய மகராஜா என்பவரால் பூஜிக்கப்பட்டதால் சரண்யபுரீஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. 

அக்னீஸ்வரர் கோயிலின் நான்குபுறமும் அகழி சூழ்ந்திருந்தது. கோயிலுக்குள் செல்ல வழியில்லாததால், முன்பகுதி அகழியை தூர்த்து வழி ஏற்படுத்தினர். ராஜராஜன் காலத்து கல்வெட்டுகள் இருப்பதன் மூலம் தொன்மையான கோயில் என்று தெரிய வருகிறது. திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரமூர்த்தி ஆகியோரால் பாடல் பெற்றது. 6 அல்லது 7ம் நூற்றாண்டு கோயிலாக இது இருக்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வடபாகமாக சாய்ந்த மூலவர்: பாணாசூரனின் தாயார், ஒரு வேண்டுதலுக்காக தினமும் ஒரு சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்தாள். 108வது லிங்கத்திற்கு பூஜை செய்தபோது, தன்னைப் போல் இவ்வாறு லிங்க பூஜை செய்தவர் யாருமில்லை என்ற ஆணவம் பிறந்தது. இதனால் இறைவன் அவளது வேண்டுதலை நிறைவேற்றவில்லை. 

இதை உணர்ந்த அந்தப் பெண்மணி, தன் தவறுக்கு பிராயச்சித்தம் கேட்க, காசி சென்று மண்ணால் லிங்கம் அமைத்து, பாவநிவர்த்தி செய்து கொள்ளும்படி கூறினார். பாணாசுரன் சிவபெருமானிடம், ""ஐயனே! என் தாய் வயதானவள். காசியில் செய்ய வேண்டியதை இங்கேயே செய்ய அருள வேண்டும்,'' என்றான்.

இறைவனும் அவ்வாறே அருளினார். அப்போது அவர்கள் அமைத்த மணல் லிங்கம் ஒரு பக்கம் சாய்ந்தது. அந்த நிலையிலேயே அவர்கள் சிவனை வணங்கினர். வடபக்கமாக கோணலாக காட்சியளித்ததால், சிவனுக்கு "கோணபிரான்' என்ற பெயர் ஏற்பட்டது. 

கோயில் சிறப்பு: அக்னி பகவான் இங்கு சிலை வடிவில் காட்சி தருகிறார். நாவுக்கரசர் முக்தி பெற்ற தலம் இது. முருக நாயனார் இந்த ஊரில் அவதரித்து இந்தக் கோயிலில் சிவத்தொண்டு செய்தார். அவர் இவ்வூர் இறைவனை வர்த்தமானிஸ்வரர் என்று அழைத்தார். வர்த்தம்' என்றால் நிகழ்காலம். இவரை வழிபட்டால் நிகழ்காலத்தில் ஏற்படும் துன்பம் நீங்கி, வாழ்க்கை ஒளிமயமாகும் என்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. 

பிரகாரத்திலுள்ள பூதேஸ்வரரை வணங்கினால் பித்ரு தோஷத்துடன் கடந்த கால பாவங்களால் ஏற்பட்ட துன்பங்கள் விலகும். இங்குள்ள பவுட்சேஸ்வரரை வழிபட்டால் எதிர்காலம் நன்றாக அமையும். ஆக, முக்காலத்துக்கும் நன்மை தரும் மூன்று சிவலிங்கங்களை இங்கு மட்டுமே தரிசிக்கலாம் என்பது சிறப்பு. 

விஷேசமான சனி பகவான்: இங்குள்ள சனி பகவான் கையில் காகத்துடன் காட்சி தருகிறார். நளமகராஜாவுக்கு ஏழரைச்சனி பிடித்து, அதை நிவர்த்தி செய்வதற்காக திருநள்ளாறு செல்லும் வழியில் இங்கு வந்து அக்னீஸ்வரரை வழிபட்டார். 

அவரது பாதம் இந்தக் கோயில் வாசலில் பட்டவுடனேயே தோஷம் நிவர்த்தியடைந்ததாம். இதனால் இங்குள்ள சனீஸ்வரரை, அனுக்கிரக சனீஸ்வரர் என்கின்றனர். திருநள்ளாறு செல்பவர்கள், முன்னதாக இங்கு சென்றால் தோஷம் நிச்சயம் நிவர்த்தியாகும் என்கிறார்கள். நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே வரிசையில் அருள்பாலிக்கின்றனர்.

வாஸ்து தோஷம் நீங்க: இங்குள்ள இறைவனை வழிபடுவதன் மூலம் வீடு, சிறந்த வாழ்க்கைத்துணை, நல்ல குழந்தைகள் எனஅனைத்து சவுபாக்கியங்களும் கிடைக்கும். புதிய வீடு கட்டுபவர்கள், மூன்று செங்கல்களை பூஜித்து எடுத்து சென்று ஈசான மூலை, அக்னி மூலை, பூஜை அறையில் தலா ஒரு செங்கல் வீதம் வைத்து வீடு கட்டுகின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம் வாஸ்து தோஷம் நீங்குவதாக நம்பிக்கையுள்ளது. எனவே இத்தல இறைவனை "வாஸ்துநாதர்' என்றும் அழைக்கின்றனர்.

சுகப்பிரசவம்: இங்குள்ள அம்பாளுக்கு கருந்தார்குழலி என்றும், சூலிகாம்பாள் என்றும் பெயர். இவள் தன் பக்தையின் மகளுக்கு பிரசவம் பார்த்தாக வரலாறு உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், திருமணத்தடை ஏற்படும் பெண்கள் இங்குள்ள அம்பாளை வழிப்பட்டால் அருள்பார்வை கிடைக்கும். கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் ஏற்பட, அம்பாளை வழிபட்டு பலனடையலாம். 

சாயரட்சை காலத்தில் ராஜராஜேஸ்வரி கோலத்தில் அம்பாள் வெள்ளைப்புடவை அணிவிப்பது வழக்கம். திருமணமாகாத பெண்கள் அம்பாளுக்கு வெள்ளைப்புடவை சாத்தினால் திருமணம் கைகூடுவதாக நம்பிக்கையுள்ளது. காலசம்ஹார மூர்த்தி இங்கு தனியாக மூலஸ்தானம் கொண்டு எழுந்தருளியுள்ளார்.

இருப்பிடம்: நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் செல்லும் ரோட்டில் 22 கி.மீ.,தூரத்தில் திருப்புகலூர் உள்ளது. பஸ் ஸ்டாப்பிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் உள்ளது. மயிலாடுதுறையிலிருந்து 33 கி.மீ.,தூரத்திலும், காரைக்காலில் இருந்து 20 கி.மீ.,தூரத்திலும், திருவாரூரிலிருந்து 18 கி.மீ.,தூரத்திலும் கோயில் உள்ளது. அடிக்கடி பஸ் உண்டு.

திறக்கும் நேரம்: காலை 5-30- பகல் 12.30 மணி. மாலை 4 - இரவு 9 மணி.
போன்: 04366 - 237 198.


முக்கிய குறிப்பு :  வெளிநாட்டில் இருப்பவர்கள் திருமணத்தில் உள்ள தடைகள் நீங்க இந்த பரிகாரத்தை அவர்கள் செய்ய முடியாத பட்சத்தில் ஜோதிட  - பரிகார கட்டணத்தை எங்களுக்கு செலுத்தினால் எந்த வித குறையும் இல்லாமல் நாங்களே உங்களுக்கு நேரில் சென்று இந்த பரிகாரத்தை கடவுளின் சன்னிதானத்தில் செய்து தருகிறோம் . 



உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328
Continue reading >>

தீபாவளிக்கு குபேரனை வணங்குங்க

0 கருத்துகள்
பண்டிகைகளின் ராஜா என்று தீபாவளியைச் சொல்வர். காரணம், அதிகம் செலவழியும் பண்டிகை இதுதான். செல்வச்செழிப்பு தீபாவளியன்று மட்டுமில்லாமல், ஆண்டு முழுவதும் தொடர லட்சுமியின் அருள் பெற்ற குபேரனின் அருட்கண் பார்வை தேவை. தூத்துக்குடி மாவட்டம் சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயில் விமானத்தில் யானையில் அமர்ந்த குபேரனைத் தரிசிக்கலாம்.
தல வரலாறு: கைலாயத்தில் சிவபார்வதி திருமணம் நடந்த போது, உலகை சமப்படுத்த அகத்தியர் பொதிகை மலைக்கு வந்தார். அவரது சீடரான உரோமச ரிஷிக்கு தாமிரபரணிக் கரையின் பல இடங்களில் சிவலிங்கம் அமைக்கும் எண்ணம் எழுந்தது. அகத்தியரின் ஆலேசனைப்படி ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அவை ஒதுங்கிய இடங்களில் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பிற்காலத்தில், அவ்விடங்களில் கோயில்கள் எழுந்தன. ஒன்பதாவது மலர் கரை ஒதுங்கிய தலம் சேர்ந்தபூமங்கலம்.
தேவியருடன் குபேரன்: கருவறையின் மேலுள்ள விமானத்தில் யானை மீது அமர்ந்திருக்கும் குபேரனின் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு தேவியர் அவருடன் இருக்கின்றனர். தேவியருடன் யானை மீது அமர்ந்திருக்கும் குபேரனை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும். கருவறையில் கைலாசநாதர், சுக்கிர அம்சத்துடன் காட்சி தருகிறார். அம்பாள் அழகிய பொன்னம்மையின் பெயரிலேயே "பொன்' இருக்கிறது. இவள் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள்.
விமானத்திலுள்ள குபேரரை வணங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில், சுக்கிரன் அனுகூலமாக இல்லாதவர்கள், நவக்கிரக மண்டபத்திலுள்ள சுக்கிரனுக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி, மொச்சைப்பொடி சாதம், தயிர்ச்சாதம் நைவேத்யம் படைத்து, வெண்தாமரை மலர் படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரை நேரத்தில் (காலை 6-7) இவரை வழிபடுவது விசேஷம்.
தலசிறப்பு: இக்கோயில் இரண்டு வாசல்களுடன் அமைந்திருக்கிறது.கன்னி விநாயகர், சந்திரன், சூரியன், சொக்கநாதர், மீனாட்சியம்மன், சனீஸ்வரர், பைரவர் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள முருகனை வலதுபுறம் திரும்பிய மயில் வாகனத்துடன் காணலாம். இக்கோயிலை பாண்டியன் குலசேகரன் அல்லது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர் கட்டியிருக்கலாம் என்பதற்கு சாட்சியாக மதுரை சொக்கநாதருக்கும், மீனாட்சி அம்மைக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தீர்த்த சிறப்பு: தாமிரபரணி இத்தலத்தின் தீர்த்தம். நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசத்தில், பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி, இவ்வூர் அருகிலுள்ள புன்னக்காயல் கடலில் சங்கமிக்கிறது. தை மற்றும் ஆடி அமாவாசையில் சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது.
திறப்பு: காலை 7- 9.30 மணி, மாலை 5.30- 7.30 மணி.
இருப்பிடம்: திருநெல்வேலியி லிருந்து 50 கி.மீ.,தூரத்தில் ஆத்தூர். அங்கிருந்து புன்னக்காயல்
பஸ்களில் 3 கி.மீ., தூரத்தில் சேர்ந்தபூ மங்கலம். ஆத்தூரில் இருந்து ஆட்டோ உண்டு.
போன்: 94883 42861.
Continue reading >>

செவ்வாய், 18 அக்டோபர், 2011

இந்திரன் பழிதீர்த்தப் படலம்!

0 கருத்துகள்
ஒரு செயலைத் தொடங்கும் முன், அந்த செயல் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்து வைத்துக் கொண்டால், மிகவும் சிறப்புடையதாக இருக்கும். முன்பின் தெரியாத ஊருக்குச் செல்லும் போது, அந்த ஊர் பற்றிய விபரங்களை விபரமறிந்தவர்களிடம் கேட்டோ, இணையத் தளங்கள் மூலம் அறிந்தோ செல்வது அங்கு சென்று வர எளிதாக இருக்கும். புராணங்களைப் படிக்கும் முன்பும் அப்படியே. புராணக்கதைகளை மட்டும் படித்தால் போதாது. அதை எழுதியவர் யார், அவரைப் பற்றிய விபரம், எந்தச் சூழ்நிலையில் எழுதினார், அவரை எழுதத் தூண்டியவர்கள் யார் என்பது பற்றியும் தெரிந்து கொண்டால், படிப்பவர்களுக்கு அதுபற்றிய முழுமையான விபரமும் தெரியவரும். திருவிளையாடல் புராணம் இன்று துவங்குகிறது. கூடல்மாநகராம் மதுரையில் சிவபெருமான் செய்த அற்புதலீலைகளை ஹாலாஸ்ய மகாத்மியம் என்னும் வடமொழி நூலில் சொல்லியுள்ளார்கள். வியாசர் இயற்றிய ஸ்கந்த புராணத்தில் இந்த லீலைகள் சொல்லப்பட்டுள்ளன. நந்திதேவர் சனத்குமார முனிவருக்கு இந்த லீலைகள் பற்றி சொன்னார் என்றும், அதை வியாசருக்கு சனத்குமாரர் சொன்னார் என்றும், வியாசர் அதை ஸ்கந்தபுராணத்தில் எழுதினார் என்றும் ஒரு தகவல் இருக்கிறது. ஹாலாஸ்ய மகாத்மியத்தை தமிழில் மொழி பெயர்த்தவர் பரஞ்சோதி முனிவர். அதை அப்படியே மொழி பெயர்க்காமல், தமிழுக்கே உரித்தான செய்யுள் நடையில் 3363 செய்யுள்களாக வடித்தார். இதில் முதல் 343 செய்யுள்கள் காப்பு, மதுரை நகர சிறப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கியது. 344 வது செய்யுள் முதல் தான் பெருமானின் திருவிளையாடல் துவங்குகிறது. வேதாரண்யத்தில் வசித்த மீனாட்சி சுந்தர தேசிகரின் மகனே பரஞ்சோதி. தந்தையே குருவாக இருந்து, மகனுக்கு சைவ சித்தாந்த கருத்துக்களைப் போதித்தார். நீறிட்ட உடலுடன் வேதாரண்யத்து பெருமானை துதித்து வந்த பதஞ்சலி முனிவர், தமிழகத்திலுள்ள பிறகோயில்களையும் பார்க்க ஆவல் கொண்டார். மதுரையம்பதிக்கு வந்த அவர், மண்டபம் ஒன்றில் தங்கியிருந்த போது, அவரது கனவில் தோன்றிய அன்னை மீனாட்சி, சிவபெருமான் அந்நகரில் நிகழ்த்திய லீலைகளை அழகு தமிழில் பாடும்படி உத்தரவிட்டாள். அன்னையின் திருக்காட்சி கண்ட பரஞ்சோதி முனிவர் தெள்ளுதமிழில் இனிய பாடல்களை வடித்தார். அதுவே திருவிளையாடல் புராணம். இது 64 படலங்களைக் கொண்டது. முதல் 18 படலங்கள் மதுரை காண்டம் என்றும், 19 முதல் 48 வரையான படலங்கள் கூடற்காண்டம் என்றும், 49 முதல் 64 வரையான படலங்கள் திருவாலவாய் காண்டம் என்றும் பெயர் பெற்றுள்ளன.
பிரம்மா ஒருமுறை ஒரு தராசுத் தட்டில் கைலாயத்தை ஒரு தட்டிலும், மதுரையம்பதியை ஒரு தட்டிலும் வைத்து நிறுத்தார். அப்போது, மதுரை இருந்த தட்டு தாழ்ந்தது. கயிலையை விட மதுரை மிகச்சிறந்த தலம் என்ற முடிவுக்கு வந்தார். அத்தகைய பெருமை பெற்ற மதுரை நகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. திருவிளையாடல் புராணத்தை அரங்கேற்ற பரஞ்சோதி முனிவர் தயாராகி விட்டார். மக்கள் அனை வரும் சுந்தரேஸ்வர பெருமானின் திவ்ய லீலைகளைக் கேட்பதற்கு வரவேண்டும் பாண்டிய மன்னரின் சார்பில் பறையறைந்து தெரிவிக்கப் பட்டது. தேரோடும் வீதிகளை மக்கள் கோமயம் தெளித்து சுத்தமாக்கினர். அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன. வாழை மரத் தோரணங்களை மக்கள் தங்கள் இல்லங்கள் முன்பு கட்டினர். இன்றைய சித்திரை திருவிழாவுக்கு நகரை அலங்கரிப்பது போல், மக்கள் வெகு விமரிசையான ஏற்பாடுகளை அவரவர் செலவில் செய்தனர். இந்த விபரத்தையறிந்து வெளியூர்களில் இருந்தெல்லாம் சிவனடியார்கள் மதுரையை மொய்த்தனர். எங்கும் சிவாய நம என்ற திருமந்திரம் ஒலித்தது. திருவிளையாடல் புராண அரங்கேற்றத்தை நடத்த பெரிய மண்டபம் வேண்டும், என்ன செய்யலாம் என யோசித்தனர் அமைச்சர்கள். கோயிலுக்குள் இருக்கும் ஆயிரங்கால் மண்டபத்தில் ஆயிரக்கணக் கான மக்கள் அமரலாம், மண்டபத்துக்கு வெளியேயும் மக்களை கூடச் செய்யலாம் என்ற அடிப் படையில் மண்டபத்தை சீரமைத்தனர். அலங்கார மேடை ஒன்றில் பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டு, பரஞ் சோதியார் எழுதிய திருவிளையாடல் புராண ஓலைச்சுவடிகள் வைக்கப்பட்டிருந்தன. பரஞ்சோதியார் விழா மேடைக்கு வந்தார். அப்போது திருச்சங்குகள் முழங்கின. முரசுகள் ஆர்ப்பரித்தன. மங்கல வாத்தியங்கள் முழங்கின. பாண்டிய மன்னர் பரஞ்சோதியாரை எதிர்கொண்டு வரவேற்று, பொன்னாடை போர்த்தினார். அனைவரும் அன்னை மீனாட்சியின் சன்னதிக்குச் சென்றனர். கற்பூர ஒளியில் மரகதவல்லி மீனாட்சி தகதகவனெ ஜொலித்து ஆசிர்வதித்தாள். அடுத்து சுந்தரேஸ்வரப் பெருமானின் சன்னதிக்குச் சென்று, அரங் கேற்றம் மிகச்சிறப்பாக அமைய வேண்டினார் பரஞ்சோதி முனிவர். பின்னர் மண்டபம் திரும்பி, விநாயகப் பெருமானை மனதில் எண்ணி கணீர் என்ற குரலில் திருவிளையாடல் புராணத்தை சொல்ல ஆரம்பித்தார்.
சக்தியாய் சிவமாகித் தனிப்பர
முத்தி யான முதலைத் துதி செயச்
சுத்தியாகிய சொற்பொரு ணங்குள
சித்தி யானை தன் செய்பொற் பாதமே!
என்று விநாயகரை வணங்கிப் பாடினார்.
தொடர்ந்து மதுரையின் சிறப்பு, புராண வரலாறு ஆகிய முன்னுரைக்குப் பின், மதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள பொற்றாமரைக் குளத்தின் சிறப்பைச் சொன்னார்.  இந்தக் குளத்தைப் பார்த்தால் தர்மம் செய்த புண்ணியம் சேரும். தீர்த்தத்தைத் தொட்டால் செல்வம் பெருகும். மூழ்கி எழுந்தால் மோட்சம் கிடைக்கும் என்றார்.
இந்திரன் பழிதீர்த்தப் படலம்
ஆசிரியரை மாணவர்கள் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக சிவபெருமானின் முதல் திருவிளையாடல் அமைந்தது. தேவலோகத்தின் அரசன் யார் என்றால் தேவேந்திரன் என்று பச்சைக்குழந்தை கூட பதில் சொல்லிவிடும். அவன் தேவேந்திரன் என்றாலும், அவனுக்கும் சட்டதிட்டங்கள் உண்டு. குறிப்பாக, தலைமை பொறுப்பில் உள்ளவன், சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டும். தனது பொறுப்பில் பலர் இருக்கிறார்களே என்ற அக்கறை வேண்டும். இல்லாவிட்டால், பதவி பறிபோய் விடும். தேவேந்திரனுக்கும் ஒருநாள் அப்படியொரு நிலை வந்தது. பூலோகத்தில் புண்ணியம் செய்தவர்களே தேவர் என்ற அந்தஸ்தை அடைகிறார்கள். பூலோகத்தில் அவர்கள் அடைய நினைத்த இன்பமெல்லாம் அங்கே கிடைக்கும். அதற்காக எதற்கும் ஒரு நேரம், காலம் உண்டல்லவா! அங்கும் நல்லநேரம், கெட்ட நேரமெல்லாம் உண்டு. தேவேந்திரனுக்கு ஒருநாள் கெட்ட நேரம் வந்தது பெண்களின் வடிவில்! தேவலோகத்தில் தேவர்கள் கூடிக்களித்திருக்க, நாட்டியத்தை ரசிக்க அப்சரஸ்கள் எனப்படும் தேவகன்னியர் உண்டு. அவர்களில் ரம்பா, ஊர்வசி, திலோத்தமா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்களின் நடனத்தை ரசித்துக் கொண்டிருந்த தேவேந்திரன், பல அப்சரஸ்களின் அழகில் மயங்கி லயித்துக் கிடந்தான். அந்த நேரத்தில் தேவர்களின் குருவான பிரகஸ்பதி அங்கு வந்தார். இவர் யார் தெரியுமா? நவக்கிரக மண்டபத்தில் மஞ்சள் உடை உடுத்தி வடக்கு நோக்கி ஒரு சிற்பம் இருக்குமே! அந்த குரு பகவான் தான்! இவரது பார்வை ஒரு இடத்தில் பட்டாலே நல்லது நடக்கும். அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள்.
தேவேந்திரனுக்கு தான் கெட்ட நேரமாயிற்றே! இல்லாவிட்டால், பொறுப்புள்ள பதவியிலுள்ள ஒருவன், பெண்களுடன் பொது இடத்தில் கூடிக் களிப்பானா? மறைவிடத்து விஷயங்கள் பொது இடத்தில் நடந்தால், யாரால் கண் கொண்டு பார்க்க முடியும்! பிரகஸ்பதி, தேவேந்திரன் நிகழ்த்திய கூத்தைப் பார்த்து, அப்படியே கண்ணைப் பொத்திக் கொண்டார். குரு பார்வையை மூடினால், நிலைமை என்னாகும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தேவேந்திரனுக்கு ஆரம்பமானது கெட்ட நேரம்.பிரகஸ்பதி, அப்படியே திரும்பிப் போய் விட்டார். தேவேந்திரன் தன் ஆட்டபாட்டத்தை முடித்துக் கொண்டு, தனது அந்தரங்க அறைக்குள் செல்லும் வேளையில், தேவர்களில் சிலர் அவனைப் பார்த்தனர். தேவேந்திரா! குருநாதர் பிரகஸ்பதி வந்திருந்தார். தாங்கள் அந்நேரத்தில் இருந்த நிலை கண்டு, கண் பொத்தி வெளியேறி விட்டார். உடனடியாக அவரைச் சந்தித்து, மன்னிப்பு கேளுங்கள். குருவின் ஆதரவு இல்லாவிட்டால் தங்களுக்கு மட்டுமல்ல! தங்களை நம்பியிருக்கும் எங்களுக்கும் சிரமம் வந்து சேரும், என்றனர். தேவேந்திரன் கதிகலங்கி விட்டான். குரு நிந்தை செய்தோமே! என்ன நடக்கப் போகிறதோ? உடனே அவரை சென்று பார்த்து வருகிறேன், என்று அவரது இல்லத்துக்கு தனது வெள்ளை யானையான ஐராவதத்தில் ஏறி விரைந்தான்.
குரு அங்கே இருந்தால் தானே! சிலருக்கு திருமணமாகாமலே இருக்கும். அதற்கு காரணம் என்ன தெரியுமா? குடும்பத்தினர் அல்லது முன்னோர் செய்த பாவத்தின் விளைவே அது. இவர்கள் மீது குருவின் பார்வை பட வேண்டுமானால், பெரும் பரிகாரங்களை எல்லாம் செய்தாக வேண்டும்! தேவேந்திரனின் பார்வையில், குரு படவே இல்லை. தனது தலைமை சீடனே இப்படியிருந்தால் மற்றவர்கள் எப்படியிருப்பார்கள்? பெண் பித்தர்களான இவர்களுக்கு போய் பாடம் எடுத்தோமே என்ற வேதனையில் குரு மறைவான இடத்துக்குப் போய் விட்டார். தேவேந்திரன் அவரைத் தேடியும் காணாமல், அவன் பிரம்மாவைப் பார்க்க ஓடினான். குரு அபச்சாரம் செய்து விட்டதை அவரிடம் சொன்னான். பிரம்மா ஒரு யோசனை சொன்னார். தேவேந்திரா! குரு நிந்தனை கொடிய பாவம். இதற்கு தகுந்த பரிகாரம் செய்தால் தான் அவர் உனக்குத் தென்படுவார். அந்த பரிகாரத்தையும் நான் சொல்கிறேன் கேள். துவஷ்டா என்ற அசுரன் ஒரு மகனைப் பெற்றிருக்கிறான். அவனது பெயர் விஸ்வரூபன். அவனுக்கு மூன்று முகம். மிகவும் கொடியவன். ஆனால், ஆச்சார அனுஷ்டானங்களை சரியாகக் கடைபிடிப்பவன். அவனை உன் தற்காலிக குருவாக ஏற்றுக்கொள். வேறு வழியில்லை, என்றார். குரு பார்வை இல்லாவிட்டால் கெட்ட நேரம் விடவே விடாது. இந்திரன் அதற்கு விதிவிலக்கா என்ன! பெரியவர்கள் ஒன்றைச் சொன்னால், அதை நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.
தன்னிலும் உயர் பதவியிலுள்ள, வேதநாயகனான நான்முகன் சொன்ன யோசனை இந்திரனுக்குப் பிடிக்கவில்லை. தேவலோகத்துக்கு ஒரு அசுரனை குருவாக நியமிக்கச் சொல்கிறாரே! இவருக்கு என்ன ஆயிற்று? என்று எண்ணியபடியே சென்றான். இருப்பினும், அவரது யோசனையை செயல்படுத்தாவிட்டால் அவரது பகையையும் சம்பாதிக்க நேரிடும். மேலும், தேவலோகத்துக்கு ஒரு குருவும் நிச்சயம் வேண்டுமே என்ற எண்ணத்துடன் விஸ்வரூபனை சந்தித்து அவனை வணங்கினான். என்ன இந்திரா! தேவலோகாதிபதி என்னைத் தேடி வந்திருக்கிறாய்! என்ன விஷயம்? என்றான். தங்களை குருவாக ஏற்க வந்துள்ளேன். தாங்கள் தேவலோக குரு பதவியை ஏற்க வேண்டும், என்றான். விஸ்வரூபனுக்கும் இதில் மனமில்லை. அசுரனான நாம், தேவர்களுக்கு குருவாக இருப்பதாவது! இருப்பினும், தானாக வலையில் வந்து சிக்கிய மானை விட்டு வைக்கலாமா! சிங்கமாக இருந்து இந்த தேவர்களை ஒரு வழி செய்து விட வேண்டும். ஏழு உலகிலும் அசுரக்கொடி பறக்க இதை விட அருமையான சந்தர்ப்பம் ஏது? என்று எண்ணி யவனாய், பதவி ஏற்க சம்மதித்தான். ஆக, மாணவனுக்கும் மனமில்லை, குருவுக்கும் வஞ்சக எண்ணம் என்ற ரீதியில் தேவர்கள் அசுரர்களின் கிடுக்கிப்பிடியில் சிக்கினர்.
ஒரு வழியாக விஸ்வரூபன் தேவர்களுக்கு குருவானான். தேவேந்திரனுக்கு தன் குலகுரு பிரகஸ்பதிக்கு செய்த துரோகம் மனதை அரித்துக் கொண்டே இருந்தது. அவரது அதிருப்தியில் இருந்து விடுபட்டு பாவம் நீங்குவதற்காக யாகம் ஒன்றை நடத்த எண்ணம் கொண்டான். தன்னுடைய விருப்பத்தை விஸ்வரூபனிடம் தெரிவித்தான். புதிய குரு விஸ்வரூபன் யாகம் நடத்த ஒப்புதல் கொடுப்பது போல நடித்து, இதையே சந்தர்ப்பமாக்கி தேவேந்திரனை கொன்று தேவலோகத்தை நிரந்தரமாக கைப்பற்றி விடவேண்டும் என்ற எண்ணம் கொண்டான். ஒருவருக்கு குரு பார்வை இல்லாவிட்டால் துன்பங்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். தேவேந்திரனுக்கு இந்த யாகத்தின் மூலம் பெரும் துன்பம் வந்து சேர இருந்தது. யாகம் துவங்கியது. விஸ்வரூபன் யாகத்திற்கு தலைமை வகித்தான். யாக குண்டத்தில் நெய்யை வார்க்கும்போது, தேவர்குலம் தழைக்க வேண்டும் என்பதற்கு பதிலாக அரக்கர் குலம் தழைக்க வேண்டும் என்று சொல்லி நெய்யை ஊற்றினான். மந்திரங்களை மனதிற்குள் உச்சரித்தான். அவன் என்ன செய்கிறான் என்பதை யாராலும் அறிந்துகொள்ள முடியவில்லை. தேவேந்திரன் சுதாரித்துக் கொண்டான். தன் ஞானதிருஷ்டியால் எதிரே அமர்ந்திருக்கும் விஸ்வரூபன் குரு என்ற போர்வையில் தனக்கு எதிராக மந்திரங்களை உச்சரிக்கிறான் என்பதை தெரிந்துகொண்டான். அவனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது. தனது வஜ்ராயுதத்தை எடுத்து விஸ்வரூபன் மீது வீசினான். இந்திரனின் வஜ்ராயுதத்துக்கு தப்பியவர்கள் யாருமில்லை. விஸ்வரூபனின் மூன்று தலைகளையும் அது கொய்தது. அந்த தலைகள் மூன்று பறவைகளாக உருமாறி வானில் பறந்தது. எப்படியோ விஸ்வரூபனின் ஆவி பிரிந்துவிட்டது. ஏற்கனவே பிரகஸ்பதியின் சாபத்தை பெற்றுக்கொண்ட இந்திரன், இப்போது புதிய குருவான விஸ்வரூபனையும் கொன்றுவிட்டதால் பிரம்மஹத்தி தோஷம் (கொலை பாவம்) பற்றிக் கொண்டது. ஒருவருக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டால் அதற்கு மாபெரும் பரிகாரங்களை செய்தாக வேண்டும். அந்த பரிகாரங்களை எல்லாம் தேவர்கள் செய்தனர். இதன் மூலம் அந்த தோஷம் நீங்கியது. ஆனால் அசுரர்களின் பகையை அவன் அதிகமாக சம்பாதித்துக்கொண்டான். விஸ்வரூபனின் தந்தை துவஷ்டா. இவர் தன் மகனைக்கொன்ற தேவேந்திரனை பழிவாங்க எண்ணம் கொண்டார். இதற்காக யாகம் ஒன்றை துவங்கினார். அந்த யாகத்தீயிலிருந்து பயங்கர ஆயுதங்கள், கோரைப்பற்கள், நாற்பது கைகளுடன் ஒரு அரக்கன் தோன்றினான். அவனது கண்களிலும் வாயிலும் விஷவாயு வெளிப்பட்டது. அவன் துவஷ்டாவை வணங்கிநின்றான்.
தலைவனே! உன் கட்டளைக்கு அடிபணிந்து உன் முன்னால் நிற்கிறேன். உனக்காக நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். அதற்கு துவஷ்டா, சீடனே! உனக்கு விருத்திராசுரன் என பெயர் சூட்டுகிறேன். நீ இப்போது இருப்பதைவிட பலமடங்காக உன் உருவத்தை வளர்த்துக்கொள்ளும் வரத்தையும் தருகிறேன். உன் உருவம் வளர வளர கோபமும் அதிகமாகும். அந்த கோபத்தை பயன்படுத்தி நீ தேவர்குலத்தை அழிக்க வேண்டும். குறிப்பாக என் மகன் விஸ்வரூபனை கொன்ற இந்திரனின் உயிர் எனக்கு வேண்டும். உடனே புறப்படு! என ஆணையிட்டார். விருத்திராசுரன் தனது நாற்பது கைகளிலும் பல்வேறு ஆயுதங்களை தாங்கி இந்திரனை தேடி புறப்பட்டான். விருத்திராசுரன் தன்னை நோக்கி வருவதை இந்திரன் அறிந்துகொண்டான். அவன் தனது வாகனமாகிய வெள்ளை ஐராவதத்தில் அமர்ந்து புறப்பட்டான். இருவரும் வானவெளியில் சந்தித்தனர். கடும் போர் ஏற்பட்டது. இந்திரன் தனது வஜ்ராயுதத்தின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டவன். அதை விருத்திராசுரன் மீது அவன் எறிந்தான். ஆனால் அது அவனை எதுவுமே செய்யவில்லை. தன் கையிலிருந்த இரும்பு தடியால் வஜ்ராயுதத்தை தடுத்து நிறுத்திவிட்டான் விருத்திராசுரன். மேலும் அந்த தடியால் இந்திரனையும் தாக்கினான். இந்திரன் மயங்கி விழுந்துவிட்டான். இந்திரன் இறந்துவிட்டான் என நினைத்த விருத்திராசுரன், துவஷ்டாவிடம் திரும்பி சென்றுவிட்டான். ஆனால் சிறிது நேரத்தில் இந்திரனுக்கு மயக்கம் தெளிந்து விட்டது. தான் உயிருடன் இருப்பது தெரிந்தால் விருத்திராசுரனால் ஆபத்து ஏற்படும் என பயந்துபோன இந்திரன் சத்யலோகத்திற்கு வந்துசேர்ந்தான்.அங்கு பிரம்மாவை வணங்கி, விருத்திராசுரனை கொல்வதற்குரிய வழி பற்றி கேட்டான். பிரம்மா அதுபற்றி ஏதும் சொல்லவில்லை. தேவேந்திரனே! விருத்திராசுரனை கொல்லும் வழியை நான் அறியமாட்டேன். அசுரர்களை கொல்லும் சக்தி ஸ்ரீமந் நாராயணனுக்கே இருக்கிறது. நாம் அவரிடம் சென்று யோசனை கேட்டு வரலாம் என சொல்லி வைகுண்டம் சென்றனர். அங்கே திருமால் ஆதிசேஷன் மீது துயில் கொண்டிருந்தார். பரந்தாமனாகிய பெருமாளை இருவரும் பாடித்துதித்தனர். திருமால் அவர்களிடம், என்ன காரணத் திற்காக வந்தீர்கள்? என கேட்டார்.
அவர்கள் வந்த காரணத்தை விளக்கினர். திருமால் இந்திரனிடம், தேவேந்திரா! திருப்பாற்கடலை கடைந்தபோது நீ உனது ஆயுதத்தை ததீசி முனிவரிடம் கொடுத்து வைத்தாய். ஆனால் அதை திரும்ப வாங்க மறந்துவிட்டாய். நீ வருவாய் என காத்திருந்த மகரிஷி வராமல் போனதால் அந்த ஆயுதங்களை விழுங்கிவிட்டார். அவை அனைத்தும் அவரது முதுகுத்தண்டில் சென்று சேர்ந்துவிட்டது. அந்த மகரிஷியிடம் வேண்டி அவரது முதுகுத் தண்டை பெற்று அதை ஆயுதமாக பயன்படுத்தி போரிட்டால் விருத்திராசுரன் மடிவான்.ஆனால் முதுகுத் தண்டை உனக்கு காணிக்கையாக கொடுத்துவிட்டால் மகரிஷி இறந்துவிடுவார். இனி அதை பெறுவது உன்னுடைய வேலை என்று சொல்லி ஆசீர்வதித்து அனுப்பினார்.தேவேந்திரன் ததீசி முனிவர் தவம் செய்துகொண்டிருந்த ஆசிரமத்திற்கு சென்றார். அவன் வந்த காரணத்தை அறியாத முனிவர் அவனை வரவேற்றார். ததீசி முனிவருக்கு இந்திரன் தான் கொண்டு வந்த மங்கலப் பொருட்களை சமர்ப்பித்தான். பெரியவர்களைப் பார்க்க வெறும் கையுடன் செல்லக்கூடாது. பழம், பூமாலை முத லானவற்றை வாங்கிச் செல்வது உத்தமம். தேவேந்திரன் அதையே செய்திருந்தான். அவன் வந்த காரணத்தை ததீசி முனிவர் கேட்டார். தேவேந்திரா! திடீரென என்னைத் தேடி வந்த காரணம் என்ன?என்றார். ஒருவரிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால், முதுகுத்தண்டை கேட்பது என்றால்... முதுகுத்தண்டை சாதாரணமாகவா எடுக்க முடியும்? உயிர் பிரிந்தால் தானே அது சாத்தியம்... இருந்தாலும், நாராயணன் இப்படி சொல்லியிருக்கிறார் எனச்சொல்லி, அவரிடம் விஷயத்தை விளக்கினான் தேவேந்திரன். ததீசி முனிவரின் முகம் பிரகாசமானது. இப்படி ஒரு பாக்கியம் எனக்கா? தாராளமாக என் முதுகெலும்பை எடுத்துக் கொள் தேவேந்திரா. தேவர்களைப் பாதுகாக்க என் முதுகுத்தண்டு உதவுமென்றால் அதை விட வேறு என்ன பேறு எனக்கு வேண்டும்? என்று அகம் மகிழச் சொன்னார். உனக்காக உயிரையும் கொடுப்பேன் கண்ணே! என்று காதலன் காதலியிடமும், கணவன் மனைவியிடமும் வசனம் வேண்டுமானால் பேசலாம். ஆனால், அதற்கு தயாராக இருப்பவர்கள் எத்தனை பேர்? ததீசி மனப்பூர்வமாக சம்மதித்தார். பத்து உயிர் வாழ்வதற்கு ஒரு உயிர் போகிறது என்றால் அதுபற்றி கவலைப்படவே கூடாது. இங்கோ! முப்பத்து மூன்று கோடி தேவர்களின் உயிர், முனிவரின் முதுகுத்தண்டில் இருக்கிறது என்பதால், அவர் உளப்பூர்வமாக சம்மதித்தார். உடனடியாக, அவர் யோகாவில் ஆழ்ந்தார். அவரது பிராணன் பிரிந்தது. பிறருக்காக உயிர் விட்ட அந்த ஆவியை வானத்தில் இருந்து புஷ்பக விமானம் வந்து ஏற்றிக்கொண்டு சிவலோகம் நோக்கிச் சென்றது. இந்திரன், முனிவரின் முதுகுத்தண்டுடன் சென்று, விருத்திராசுரனுடன் போரிட்டான். அவனால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அசுரப்படைகள் முழுமையாக அழிந்து விட்டன. விருத்திரனுக்கு ஆச்சரியம். இப்படியும் ஒரு ஆயுதமா? இனியும் இவன் முன்னால் நின்றால் உயிரிழக்க நேரிடும் என்றெண்ணிய அவன் கடலுக்குள் போய், அங்கே ஏற்கனவே மறைந்திருந்த அசுரர்களுடன் போய் இணைந்து கொண்டான். தேவேந்திரன் பிரம்மாவிடம் ஓடினான். கடலுக்குள் மறைந் தவனை எப்படி பிடிப்பது என்று யோசனை கேட்டான்.
மகரிஷி அகத்தியரால் மட்டுமே அது முடியும். காவிரியையும், தாமிரபரணியையும் தன் கமண்டலத்துக்குள் அடக்கியவர் அவர். அவரைச் சந்தித்தால் இதற்கு விடிவு பிறக்கும், என்றார். இந்திரன் அகத்தியரைத் தேடிச் சென்று நமஸ்கரித்து, வந்த விஷயத்தைச் சொன்னான்.அதுபற்றி கவலை வேண்டாம், என அருள் பாலித்த அகத்தியர், அந்தக் கடலருகே சென்று உளுந்து அளவுக்கு மாற்றி, அதை உள்ளங்கையால் அள்ளி பருகி விட்டார். வற்றிப் போன கடலுக்குள் அசுரர்கள் அங்குமிங்கும் ஓடினர். விருத்திராசுரனை நோக்கி முதுகுத்தண்டை வீசினான் தேவேந்திரன். அது அவனை விரட்டிச் சென்று தலையைக் கொய்தது. குரு நிந்தனை மிகவும் பொல்லாதது. எப்படி தெரியுமா? விருத்திராசுரன் மடிந்த அடுத்தகணமே கொலைப் பாவமான பிரம்மஹத்தி அவனைத் தொற்றிக் கொண்டது. குருவை ஒருமுறை அவமதித்ததால், அவன் தொடர்ந்து அவஸ்தைகளை அடைந்து வந்தான். இன்னும் அது தீர்ந்தபாடில்லை. நாராயணன், பிரம்மா ஆகியோர் இருந்தும், இரண்டு மகரிஷிகளின் உதவி இருந்தும் இப்படி ஒரு நிலை. அதனால் தான் தெய்வத்துக்கு முன்னதாக குருவுக்கு ஸ்தானம் கொடுத்தார்கள் பெரியவர்கள். கொலைப் பாவம் காரணமாக, இந்திரனுக்கு சித்த பிரமை ஆகி விட்டது. அவன் தரையில் உருண்டு புரண்டு அரற்ற ஆரம்பித்தான். பின்னர், ஒரு தாமரைத் தண்டுக்குள் சென்று அதனோடு ஐக்கியமாகி விட்டான். இப்போது தேவலோகத்தில் தலைமைப் பொறுப்பு காலியாகி விட்டது. தேவேந்திரன் போன இடம் தெரியவில்லை. இதனால் நகுஷன் என்ற தேவனை இந்தப் பதவியில் தேவர்கள் அமர்த்தினர். நகுஷன் பதவிக்கு வந்தவுடன் ஆட்டம் போட ஆரம்பித்து விட்டான். இந்திரப்பதவியில் இருக்கும் எனக்கு இந்திராணி சொந்தமாக வேண்டும் என்று வாதம் செய்ய ஆரம்பித்து விட்டான். இந்திராணிக்கு பல வகைகளிலும் தொந்தரவும் கொடுத்தான். இந்திராணி அதற்கு படியவில்லை.
ஒருநாள் இந்திராணியை தன் அந்தப்புரத்துக்கு இழுத்து வாருங்கள் என்று காவலர்களுக்கு உத்தரவு போட்டான். இந்த விஷயம் தேவகுருவிற்கு தெரிந்து விட்டது. ஆஹா... நம்முடைய பிடிவாதத்தால் இந்திராணிக்கு களங்கம் வரலாமா? அவளது கற்புக்கு பங்கம் வந்தால் நான் தானே பொறுப்பு, என்று முடிவெடுத்து, தேவலோகம் சென்றார். இந்திராணி அவரது பாதங்களில் விழுந்து, தன் கணவர் மீது கொண்ட கோபத்தை மறந்து விடும்படியும், தன் கற்பிற்கு பாதுகாப்பு கேட்டும் மன்றாடினாள். அவளது கண்ணீர் பிரகஸ்பதியைக் கரைத்தது. குரு பலம் குறைந்தவர்கள், நவக்கிரக சன்னதியில் உள்ள குருவிடம், கண்ணீர் விட்டு மன்றாடினால், இரக்க குணமுள்ள குரு, சோதனைகளைக் குறைப்பார் என்பது இதில் இருந்து நமக்கு கிடைக்கும் தகவல். குருதேவர், அவளை சமாதானம் செய்து, ராணி! கவலை படாதே. நகுஷன் உயர்பதவியில் இருக்கிறான், அவன் மாபெரும் வீரன் வேறு, அவனை அவ்வளவு எளிதில் யாராலும் அடக்க முடியாது. அந்த பராக்கிரமசாலியை அடக்க ஒரு உபாயம் சொல்கிறேன் கேள். அவனை ஒரு தங்கப்பல்லக்கில் அமர்ந்து, ஏழு ரிஷிகள் அதனை தூக்கி வர வேண்டும் என்றும், அவ்வாறு என்னை (இந்திராணி) காண வந்தால், நான் உமது மனைவியாவேன், என்று சொல்லியனுப்பு, என்றார். குருவின் கட்டளையை ஏற்ற இந்திராணியும் அவ்வாறே செய்தாள். நகுஷன் சப்தரிஷிகளை வரவழைத்தான். ஏ ரிஷிகளே! என்னை இந்திராணியின் இருப்பிடத்துக்கு பல்லக்கில் அமர்த்தி தூக்கிச் செல்லுங்கள், என உத்தரவு போட்டான். பல்லக்கு புறப்பட்டது. அவர்களில், ஒரு ரிஷி மட்டும் சற்று மெதுவாகச் சென்றதால், மற்றவர்களும் மெதுவாக நடக்க வேண்டியதாயிற்று. நகுஷன் பல்லக்கில் இருந்தபடியே, மெதுவாகச் செல்பவன் யார்? என்று ஒருமையில் கத்தினான். அந்த முனிவர் அவனை எட்டிப்பார்த்தார்.
ஓ அகத்தியரா! இந்தக் குள்ளனால் தான் தாமதமா? அகத்தியரே! என் அவசரம் உமக்கென்ன தெரியும்? இந்திராணியை அடைய வேண்டும் என்ற விரகம் தாளாமல் அவதிப்படும் என்னைக் கொஞ்சமாவது புரிந்து கொண்டீரா? பருந்தைக் காணும் பாம்பு எப்படி வேகமாக ஊர்ந்து செல்லுமோ அதைப் போல் பல்லக்கை வேகமாகச் சுமந்து செல்லுங்கள், என உத்தரவிட்டான். அகத்தியர் சாதாரணமானவனரா? தன்னை அவமதித்த அந்த காமாந்தகாரனை விடுவாரா? நகுஷா! நீதிமுறை பிறழ்ந்து நெறிகெட்ட வார்த்தைகளைப் பேசினாய். உன் மோகத்தைத் தீர்க்க சப்தரிஷிகளான எங்களை பாம்பு போல் விரைந்து செல்லச் சொன்னாயே! அடேய், அந்தப் பாம்பாகவே நீ மாறுவாய். இப்போதே இறப்பாய்! என்று சாபமிட்டார். பெரியவர்கள் நம்மைச் சுமப்பவர்கள். குடும்பத்தில் எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்து, அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு, இளையவர்களை வளர்ப்பவர்கள். அவர்களை நாம் மதிப்புடன் நடத்த வேண்டும். இல்லாவிட்டால் நகுஷனைப் போல் கடும் சாபத்துக்கு ஆளாகி, நம்மையே இழந்து விடுவோம். அகத்தியரின் சாபம் பொய்க்குமா? உடனடியாகப் பலித்து விட்டது. நகுஷன் பாம்பாக மாறி பல்லக்கில் இருந்து விழுந்து படமெடுத்து தன்னைச் சுற்றி நின்ற காவலர்களை கடிக்கச் சென்றான். உடனே காவலர்கள் அதைக் அடித்தே கொன்று விட்டனர். பாம்பு இறந்தது. அகத்தியரால் நகுஷன் மாண்ட செய்தி இந்திராணியை எட்டியது. தனது கற்புக்கு களங்கம் வராமல் காப்பாற்றிய அகத்தியரை அவள் மனதார வணங்கினாள். பின்னர் தேவகுரு பிரகஸ்பதி, தாமரை தடாகத்தில் மறைந்திருந்த இந்திரனைத் தேடிச் சென்று அவனை வரவழைத்தார். குரு பார்க்க கோடி நன்மை ஆயிற்றே! இந்திரன் தான் செய்த பாவத்துக்கு மன்னிப்பு கேட்டு அவரது பாதங்களைப் பற்றிக்கொண்டான்.
குருவே! அடியேன் தங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்ததன் விளைவை அனுபவித்து விட்டேன். தங்களுக்கு அவமானம் விளைவித்தும் அவற்றைப் பொருட்படுத்தாமல் என் மனைவியின் மானத்தைக் காப்பாற்றினீர்கள். தங்கள் கிருபை வேண்டும், என பிரார்த்தித்தான். பின்னர் பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக பூலோகம் சென்று அங்குள்ள புனிததீர்த்தங்களில் நீராடும்படியும், தேவர்கள் எல்லோருமே அங்கு செல்லலாம் என்றும் ஆலோசனை சொன்னார். அதன்படி இந்திரனின் தலைமையில் புஷ்பக விமானத்தில் அனைவரும் பூலோகம் புறப்பட்டனர். பனிபொங்கும் கயிலைமலையில் இறங்கிய அவர்கள் சிவபெருமானையும், உமாதேவியையும் வணங்கி கேதாரம், காசி உள்ளிட்ட தலங்களைத் தரிசித்தனர். கங்கை, யமுனை, சரஸ்வதியில் நீராடினர். நாம் பூலோகத்தில் வாழ்கிறோம் என்றால் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். தேவர்கள் கூட அவர்கள் செய்த பாவம் நீங்க பூலோகத்து புண்ணிய தீர்த்தங்களை நாடித்தான் வர வேண்டியுள்ளது. ஆனால், அதன் அருமை தெரியாமல் நாம் ஆறுகளை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறோம். இனியேனும், நதிகளின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொண்டு அவற்றுக்குரிய மரியாதையைச் செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் கடம்பவனத்தை அடைந்தனர். அங்கே ஒரு லிங்கம் தென்பட்டது. அதைக் கண்ட இந்திரன் அவ்விடத்தில் ஒரு தாமரைக் குளம் இருந்ததையும் பார்த்தான். அந்த தீர்த்தத்தில் தங்கத் தாமரைகள் பூத்திருந்தன. அந்த லிங்கத்திற்கு பூஜை செய்த இந்திரன், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவிடம், உடனடியாக லிங்கம் இருந்த இடத்தில் அழகிய விமானம் அமைக்குமாறு பணித்தான். எட்டு யானைகள் தாங்கும் அழகிய விமானத்தை விஸ்வகர்மா அமைத்தார். பலநாட்களாக அங்கேயே தங்கி இந்திரன் பூஜைகள் செய்தான். அவனது பிரம்மஹத்தி தோஷம் நீங்கி விட்டது. இறைவன் அவன் முன்னால் தோன்றி, இந்திரா! உன் மீதான சாபம் நீங்கியது. நான் இந்த தலத்தில் சொக்கநாதர் என்ற பெயருடன் எழுந்தருள்வேன். சோமசுந்தரர் என்றும் என்னை அழைப்பர். இத்தலத்துக்கு வருபவர்கள் தீராத பாவங்களும் நீங்கப்பெறுவர், என அருள் பாலித்தார். பின்னர் அனைவரும் தேவலோகம் சென்றனர். அங்கு சென்றதும், மற்றொரு புது பிரச்னை தோன்றியது.
Continue reading >>

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

ஒரே தலத்தில் ஐந்து நரசிம்மர்

0 கருத்துகள்
ஒரே தலத்தில் ஐந்து நரசிம்மர்களைத் தரிசித்த பாக்கியம் பெற வேண்டுமா?ஆந்திர மாநிலம் கிருஷ்ணாமாவட்டம் வேதாத்ரிநரசிம்மர் கோயிலுக்கு வாருங்கள்.
தல வரலாறு: சோமாக்சுரன் என்ற அசுரன் பிரம்மாவிடம் இருந்து நான்குவேதங்களையும் திருடிக் கொண்டு கடலுக்கு அடியில் சென்று மறைந்தான். இதனால், படைக்கும் தொழிலைச்செய்ய முடியாமல் தவித்த பிரம்மா, ஸ்ரீமன்நாராயணனிடம் முறையிட்டார். பெருமாள் மச்சாவதாரம் எடுத்து கடலுக்குள் சென்று சோமாக்சுரனை அழித்தார். வேதங்களை மீட்டு வந்தார். அந்த வேதங்கள் மனித வடிவில் தோன்றி பெருமாளுக்கு நன்றி தெரிவித்தன. தாங்கள் தங்கி இருக்கும் இடத்தில், பெருமாளும் தங்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தன. தற்போது அங்கு தங்க இயலாது என்றும், நரசிம்ம அவதார காலத்தில் இரண்யனை அழித்த பிறகு, அங்கு வருவதாக பெருமாள் உறுதியளித்தார். வேதங்கள் கிருஷ்ணவேணி நதிக்கரையில் இருந்த சாளக்கிராம மலையில் தங்கின. அவர்களைக் கண்ட கிருஷ்ணவேணி, தனக்கும் பெருமாள் தரிசனம் வேண்டுமென்ற விருப்பத்தை தெரிவித்தாள். வேதங்களும், கிருஷ்ணவேணியும் சில யுகங்களாகத் தவமிருந்தன. நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாள், இரண்யனை அழித்த பிறகு அங்கு வந்தார். வேதங்கள் தங்கிய இடத்திற்கு "வேதாத்ரி' என்று பெயரிட்டு அங்கேயே தங்கினார். அவரது உக்ரம் தாங்க முடியாததாக இருந்தது. எனவே,அவரை "ஜ்வாலா நரசிம்மர்' என்றனர். இதன் பிறகு, பிரம்மா சத்தியலோகத்தில் இருந்து வேதாத்ரி வந்தார். வேதங்களை தன்னுடன் அழைத்துச் செல்லும்போது, கிருஷ்ணவேணி நதியில் கிடைத்த நரசிம்மரின் சாளக்கிராமக்கல்லுடன் திரும்பினார். ஆனால், அந்தக் கல்லின் உக்ரத்தை தாளமுடியாமல், மீண்டும் கிருஷ்ணவேணி நதியிலேயே வைத்து விட்டார்.
பிற்காலத்தில், தசரதருக்காக புத்திரகாமேஷ்டி யாகம் செய்த ரிஷ்யசிருங்க முனிவர் வேதாத்ரி வந்தார். அவர் அங்கிருந்த நரசிம்மரின் உக்ரத்தைத் தணிக்கும் வகையில், லட்சுமி தாயாரைப் பிரதிஷ்டை செய்தார். இதனால், உக்ரநரசிம்மர் லட்சுமிநரசிம்மராக மாறினார். லட்சுமிநரசிம்மரைத் தரிசிக்க கருடாழ்வார் வைகுண்டத்தில் இருந்து வந்தார். அவர், தன்னுடன் நரசிம்மரின் ஒரு வடிவத்தை எடுத்துச் சென்று வேதாத்ரி அருகில் உள்ள ஒருமலையில் வைத்தார். அந்த மலை "கருடாத்ரி' எனப்படுகிறது.
இங்குள்ள நரசிம்மருக்கு "வீரநரசிம்மர்' என்பது திருநாமம். ஆக, வேதாத்ரியில் ஜ்வாலாநரசிம்மர், வீரநரசிம்மர், சாளக்ராமநரசிம்மர், லட்சுமிநரசிம்மர், கருவறையில் யோகானந்த நரசிம்மர் என ஐந்து நரசிம்மர்கள் வீற்றிருக்கின்றனர்.
சிறப்பம்சம்: இந்த நரசிம்மரை வழிபட்டால் கலியுகத்தில் நமக்கு ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் நீங்கும் என்று வியாசமுனிவர் கூறியிருக்கிறார். இந்த கோயிலுக்கு செல்பவர்கள் முக்தி அடைவர். 900 ஆண்டுகளுக்கு முன், ரெட்டி மன்னர்கள் தற்போது இருக்கும் கோயிலை கட்டியுள்ளனர். புலவர் எர்ர பிரகதா, கவிஞர் சர்வ பவ்ம ஸ்ரீநாதா, வியாக்ய கார நாராயண தீர்த்தலு ஆகியோர் இந்த நரசிம்மர் குறித்து பாடியுள்ளனர். ஸ்தோத்திர தண்டகம், காசிக்காண்டம் ஆகிய நூல்களில் இந்த நரசிம்மர் பற்றி கூறப்பட்டிருக்கிறது.
மலைக்கோயில்: வேதாத்ரி அடிவாரக்கோயிலில் இருந்து 285 படிகள் ஏறினால் சுயம்பு நரசிம்மர் புற்றுவடிவில் இருப்பதைக் காணலாம். இங்கு ஆஞ்சநேயருக்கும் சுதை சிற்பம் உள்ளது. திருமணம் ஆகாத பெண்கள் இங்குள்ள மரத்தில் மஞ்சள் கயிறு கட்டுகின்றனர். குழந்தை இல்லாத பெண்கள் தொட்டில் கட்டுகின்றனர். நாகர் சிற்பங்களும் உள்ளன. மலையில் இருந்து கிருஷ்ணாநதியின் எழில்மிகு தோற்றத்தைக் காணலாம். நதியில் பாதுகாப்பாக நீராட படித்துறை வசதி செய்யப்பட்டுள்ளது.
உய்யால வழிபாடு: குழந்தையில்லாத பக்தர்கள் வேதாத்ரி நரசிம்மருக்கு உய்யால வழிபாடு செய்வதாக வேண்டிக் கொள்கின்றனர். "உய்யால' என்றால் "தொட்டில்'. குழந்தை பிறந்ததும் நரசிம்மரையும், செஞ்சு லட்சுமி தாயாரையும் தொட்டிலில் வைத்து ஆட்டும் நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
சிவன் சந்நிதி: நரசிம்மர் கோயிலாக இருந்தாலும், இங்கு சிவனுக்கும் சந்நிதி உள்ளது. சந்நிதி முன்பு தனி கொடிமரம் இருக்கிறது. சிவபெருமானை "ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி' என்றும், அம்பிகையை "பார்வதி அம்மவாரு' என்றும் அழைக்கின்றனர். விழாக்காலங்களில் உற்சவர் சிவபார்வதி சிறிய தேரில் பவனி வருகின்றனர். சிவன் முன் நந்தி இருக்கிறார். வீரபத்ரசுவாமிக்கு தனி சந்நிதி இருக்கிறது. இங்கு திருநீறு வழங்கப்படுவதில்லை. தீர்த்தம் தருகின்றனர். சிவபாதம் பொறித்த ஜடாரியும் வைக்கின்றனர்.
தங்கும் வசதி: இங்கு தேவஸ்தானம் சார்பில் தங்கும் வசதி உள்ளது. மண்டபத்தில் தங்க ரூ. 30, தனியறை வாடகை ரூ.150, ரூ.250. லாக்கர் கட்டணம் ரூ.10.
திறக்கும் நேரம்: காலை 6-மதியம் 1மணி, மாலை 3-இரவு 8.30 மணி.
இருப்பிடம்: விஜயவாடா- ஐதராபாத் ரோட்டில் 60 கி.மீ., தூரத்தில் சில்லக்கல்லு என்னும் சிறுநகரம். இங்கிருந்து இடதுபுறமாக செல்லும் ரோட்டில் 10 கி.மீ., கடந்தால் வேதாத்ரி.
போன்: 098482 75169, 08678- 284 899, 284 866.

""இந்தக் கோயிலுக்கு வந்த ஒரு பக்தை கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். ஆப்பரேஷன் செய்தாலும் பிழைப்பது அரிது என டாக்டர்கள் சொல்லிவிட்டனர். அந்த அம்மையாரின் குடும்பத்தினர் வேதாத்ரி நரசிம்மர் கோயிலுக்கு அழைத்து வந்து, அவரைக் காப்பாற்றும்படி சுவாமியிடம் சரணடைந்தனர். என்ன ஆச்சரியம்! அந்த அம்மையார் அதிசயமாக உயிர் பிழைத்தார். நரசிம்மருக்கு கத்தி ஒன்றை அவர் காணிக்கையாக்கினார். பிழைக்க முடியாத தனக்கு, டாக்டர் ரூபத்தில் வந்து, ஆபரேஷன் செய்தது வேதாத்ரி நரசிம்மனே என அவர் மனம் நெகிழ்ந்து சொல்கிறார். மாதம்தோறும் கோயிலுக்கு வருகிறார். காணிக்கை கத்தி நரசிம்மர் முன் இருக்கிறது''

குழந்தையில்லாத பக்தர்கள் வேதாத்ரி நரசிம்மருக்கு உய்யால வழிபாடு செய்வதாக வேண்டிக் கொள்கின்றனர். "உய்யால' என்றால் "தொட்டில்'.
Continue reading >>

காளியை திட்டிய கவிஞன்

0 கருத்துகள்
காளியைத் திட்டும் தைரியம் யாருக்காவது உண்டா?
சுட்டெரித்து விடமாட்டாளா என்று சந்தேகம் வரும். ஆனால், அவளையும் திட்டித் தீர்த்தார் மகாகவி காளிதாஸ்.
காளிதேவி, தன் அருளால் காளிதாசரை மாபெரும் கவிஞராக்கினாள். அவர் போஜராஜனின் அரசவைப் புலவராக இருந்த போது, தண்டி, பவபூதி என்ற கவிஞர்களும் இருந்தனர். மூவருமே விடாக்கண்டன், கொடாக்கண்டனாக கவித்துவம் பெற்றவர்கள். ஒருசமயம், இம்மூவரில் யாருடைய புலமை உயர்ந்தது என்ற வாதம் ஏற்பட்டது. இதுபோன்ற சமயங்களில், தெய்வசந்நிதியில் தீர்ப்பு கேட்பது ராஜாக்களின் வழக்கம். போஜராஜனும் காளி சந்நதிக்கு வந்தான்.
தண்டியிடம் கவிதை ரசனை அதிகமென்றும், பவபூதியின் பாடல்கள் அறிவுப்பூர்வமானவை என்றும் காளியின் குரல் அசரிரீயாகக் கேட்டது. காளிதாசரைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. எனவே அவருக்கு கோபம் வந்து விட்டது. "அப்படியானால் என் திறமை என்னடி?'' என்று ஒருமையில் கோபமாகத் திட்டிவிட்டார்.
ஆனால், காளி அவரைப் பற்றியும் சொல்ல இருந்தாள். அதற்குள் காளிதாசர் அவசரப்பட்டு விட்டார்.
""மகனே காளிதாசா! அவசரக்குடுக்கையாக இருக்கிறாயே! நான் மற்றவர்களின் பாண்டித்யம் பற்றியே மெச்சினேன்.
"த்வமேவாஹம் த்வமேவாஹம் த்வமேவாஹம் ந ஸம்சய' என்று உன்னைப் பற்றி சொல்வதற்குள் என்ன அவசரம்?'' என்றதும், காளிதாசர் அழுதே விட்டார்.
ஏன் அழுதார் தெரியுமா?
அந்த ஸ்லோகத்தின் பொருள் தெரிந்தால், காளியின் கருணையைப் பார்த்து நீங்களும் ஆனந்தக்கண்ணீர் பெருக்குவீர்கள்.
""நீதானே நான் நீதானே நான் நீதானே நான்' என்பதே அதன் பொருள். நீயும், நானும் ஒன்றான பிறகு உனக்கு மிஞ்சியபுலவனேது'' என்றாள் காளி.
அந்தக் கருணைக்கடலில் விஜயதசமியன்று உங்கள் கோரிக்கையை வையுங்கள். வெற்றி உங்களுக்கே!
Continue reading >>

சமீபத்திய கருத்துகள்