Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

சனி, 19 ஏப்ரல், 2014

சுக்கிரனின் ஆதிக்க அதிர்ஷ்ட எண்ணான - 51 - ம் எண்ணின் பலன்கள் ?ஆன்மீக ஜோதிடர் அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர் ஆர் ராவணன் BSC

                                                           ஓம் சிவசக்தி 
அன்பான வாசக உள்ளங்களுக்கு ஜோதிடர் ஆர். ராவணனின் வேண்டுகோள் . எமது இணைய தளத்தில் நீங்கள் வாசிக்கும் பயன் தரும் ஜோதிட கட்டுரைகளை வாசித்த பின்பு எமது இணைய தளத்தில் இருக்கும் விளம்பர படங்களை க்ளிக் செய்து அதனையும் பார்க்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன் . 

பெயரின் மொத்த கூட்டு எண் - பெயரின் ஹீப்ரு பிரமிடு எண் - 51 - க வருபவர்களுக்கு இந்த பலன்கள் பொருந்தும் . 

மிக்க சக்தி வாய்ந்த எண் . கோபம்- வீரம் - ஆகர்ஷணம் - வெறுப்பு - விருப்பு - அன்பு எல்லாம் இதில் காணப்படும் . மேல் அதிகாரிகளின் பகைமையும் ஏற்படலாம் . இந்த எண்ணோடு " நீதி தேவனாக கிரீடம் அணிந்த அரசன் வாழ் ஏந்தி அமர்ந்துள்ளவாறு " இருப்பதை போன்ற சித்திரம் எகிப்திய பிரமிடுகளில் காணப்படுகிறது . 

" ஸர்வ ஜன வசியம் என்றும் " சிருங்காரம் - ரௌத்ரம் - அற்புதம் - வீரம் - பயானகம் - ஹாஸ்யம் - கருணை - ஆகிய எட்டு வகையான உணர்ச்சிகள் தேவியின் பார்வையில் உள்ளதாக இந்த எண்ணை பற்றி மந்திர நூல் கூறுகிறது . 

மிகவும் சக்தி வாய்ந்த இந்த எண்  புதன் + சூரியன் இணைந்து கன்னியாராசியில் பலம் பெறுவதையும் குறிக்கிறது . மிக சாமானிய மனிதனாக இன்று இருப்பவன் நாளை திடீரென பிரமுகனாவான் . மிக பெரிய பதவிகளும் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும் . உடல் பலம் உள்ள பலம் இரண்டும் ஒருங்கே மேலோங்கி கட்டுகடங்காத உணர்ச்சியும் - கற்பனைகளும் - சலிப்பரியாத உழைப்பும் உண்டாகும் . 

தேகத்திலும் - அகத்திலும் மாபெரும் - மாயாசக்தி புகுந்து கொண்டது போல் மனோ பலமும் சரீர பலமும் தென்படும் . நெற்றி கண்ணால் மன்மதனை பரமேசுவரன் எரித்தபொழுது ஏற்பட்ட வைராக்கியமும் - கடுமையும் - போல உடல் - உள்ளம் - இரண்டும் - சிங்க வேகத்தில் இயங்குதலும் - அதே நெற்றி கண்ணில் காமம் தோன்றி தேவியை நோக்குவதுமாக மந்திர நூல்களில் விவரிக்கபடுவதால் இந்த எண்ணிக்கையில் பெயர் உடையவர்கள் கோபத்திலும் - தாபத்திலும் - அதே வேகம் இருக்கும் . 

வியாபாரம் - பதவி - பொருள் - புகழ் அனைத்தும் சேரும் . ஒரு பக்கம் அற்புதமான பலன்கள்  நடைபெற்று வந்தாலும் 51 ம் எண்ணை குறிக்கும் சுக்ரன் கன்னி ராசியில் நீச்சம் அடைவதால் இவர்களுக்கு மறைமுகமான தீவிரமான எதிர்ப்புகளும் - மறைமுகமான தீய சக்திகளும் இவர்களுக்கு பயத்தை உருவாக்கும் . கடுமையான சொற்களால் அடுத்தவர் இதயத்தை காயப்படுத்தாமலும் - பொறுமையுடன் நடந்து வந்தால் இவர்களுக்கு பாதிப்பு இல்லை . ஏராளமான பணம் - பொருள் - பூமி லாபங்கள் - வந்தாலும் - நீச்சமடைந்த சுக்ரனின் ஆதிக்க எண் என்பதால் மனைவி- மனைவி வழி உறவு விஷயத்தில் மன சஞ்சலங்கள் உண்டாகலாம் . 

பிறந்த தேதி 3 - 12 - 21 - 30 - க வருபவர்களுக்கும் - பிறந்த தேதியின் கூட்டு எண் ஹீப்ரு பிரமிடு எண் - 3 -  க வருபவர்களுக்கும் இந்த 51 ம் எண் தீமையான பலன்களை உருவாக்கும் .

உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? கணவன் - மனைவி - இருவருக்கும் இடையே கருத்து  வேறுபாடா? திருமணம் தாமதம் ஆகும் நிலையா? திருமணம் ஆகி உங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லையா? பிறந்த உங்கள் குழந்தைக்கு அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? சொத்து பிரச்சனையா? நிரந்தரமான வேலை வாய்ப்பு அமையவில்லையா? நீங்கள் செய்யும் தொழிலில் நஷ்டமா? உங்கள் கடைக்கோ - உங்கள் நிறுவனத்துக்கோ அதிர்ஷ்டகரமான முறையில் பெயர் அமையவில்லையா? கடன் பிரச்சனையால் அவதிபடுகிறீர்களா? பதவி உயர்வு கிடைக்கவில்லையா? வெளி நாடு சென்று சம்பாதிக்கும் முயற்சியில் தோல்வியா? உடலில் தீராத வியாதியா? வாழ்க்கையின் முன்னேற்றத்திற்க்காக நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் தோல்வியா? கவலையே வேண்டாம். இதற்க்கு காரணம் உங்களின் ஜாதகம் யோகமாக அமைந்திருந்தாலும் கூட உங்களின் பெயரின் அமைப்பு - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - போன்றவற்றிக்கு நன்மை தராத தீய கிரகங்களின் ஆதிக்கத்தில் அமைந்திருக்கலாம் . இத்தகைய அனைத்து பிரச்சனைகளில் இருந்து விடுபட உங்களின் ஜாதக அமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து - உங்களின் பிறந்த தேதி - பிறந்த தேதியின் கூட்டு எண் - ஹீப்ரு எண் - இவைகளுக்கு உடனடியாக நன்மை தர கூடிய வகையில் உங்களின் பெயரை அதிர்ஷ்ட பெயரியல் சாஸ்த்திர முறைப்படி சிறு திருத்தம் செய்து வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி அடைய ஜோதிடத்தின் மூலம் வளமான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறோம் .  

வெளி நாட்டில் இருந்து எம்முடன் ஜோதிடம் பார்க்க விருப்பம் உள்ளவர்களுக்கு மெயில் மூலமாகவும் தொலை பேசி மூலமாகவும் ஜோதிட ஆலோசனை வழங்குகிறோம் .

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
ஜோதிடர் :R.ராவணன் .B.Sc
ஜோதிடம், கைரேகை, எண்கணித ஜோதிடம், 
அதிர்ஷ்ட பெயரியல் ஆராய்ச்சியாளர்
ராஜா முத்தையா மருத்துவமனை அருகில்,
கலுங்குமேடு   அண்ணாமலை நகர்,
சிதம்பரம், தமிழ் நாடு, இந்தியா 
MAIL ADDRESS: ammanastrology@gmail.com
Contact Numbers:
91 + 8122733328

Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்