Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

உடலில் அடிக்கடி சளித்தொல்லை( SYNOS PROBLEM)ஏற்படுவதற்கு ஜோதிட ரீதியாக காரணம் சொல்ல முடியுமா?

ஜோதிட சாஸ்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒன்பது வகையான கிரகத்திற்கும் ஒவ்வொரு தன்மை இருக்கிறது. அதாவது நெருப்பு அம்சம், காற்று அம்சம் நீர் அம்சம், என்று மூன்று வகையாக பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த கிரகங்களில்  கிரகங்களில் குளிர்ச்சி கிரகமாக சந்திரனும்,  பனிகோள் என்று அழைக்கபடுகின்ற சனிபகவானும் திகழ்கிறார்கள். COOL என்றால் ஆங்கிலத்தில் குளிர்ச்சி என்று பொருள். COOL என்று ஆங்கிலத்தில் எழுதி எண்கணித சோதிடத்தில் கொடுக்கப்பட்டுள ஒவ்வொரு எழுத்துக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு எண்ணை கொடுத்து மொத்தமாக கூட்டும்போது 3  7  7  3 = 20 என்று குளிர்ச்சி கிரகமான சந்திரனின் ஆதிக்க எண்ணான இருபது வரும்.  சளி பிடித்ததோ சனியன் பிடித்தது என்பார்கள். ஜலதோஷம்  பிடித்திருப்பதை ஆங்கிலத்தில் COLD  என்பார்கள்.COLD என்று ஆங்கிலத்தில் எழுதி எண்கணித சோதிடத்தில் கொடுக்கப்பட்டுள ஒவ்வொரு எழுத்துக்கும் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு எண்ணை கொடுத்து மொத்தமாக COLD 3  7  3  4 = 17 = 8 என்று  சனி பகவானின் ஆதிக்கத்தில் வரும். அதே போல் குளிர்ச்சி ராசிகளாக கடகம் மகரம் மீனம் போன்ற ராசிகள் கருதப்படுகின்றன. சளி தொல்லை ஏற்படுவதற்கு(SYNOS  PROBLEM) இந்த இரு கிரகங்களும் முக்கிய காரணமாகின்றன. 
லக்னாதிபதி மேலே சொன்ன கடகம்  மகரம் மீனம் போன்ற ராசிகளில் இருப்பது .   
மேலே சொன்ன ராசிகளில் சனி பகவான், சந்திரன் இருப்பது. 
இந்த இரண்டு கிரகங்குளும் , மகரம், கடகம், சொந்த வீட்டில் ஆட்சியாய் இருப்பது. 
இரண்டு கிரகங்களும் பரிவர்த்தனை ஆகி இருப்பது , அதாவது சனி பகவானின் வீடான மகர ராசியில் சந்திரன் இருப்பது , சந்திரனின் கடக ராசியில் சனி பகவான் இருப்பது.   
மீன  ராசியில் , சந்திரன் , சனி பகவான் போன்ற கிரகங்கள் இருப்பது.  i
மேற்கண்ட கிரக நிலை அமைப்புகள் கொண்ட ஜாதகருக்கு (SYNOS  PROBLEM ) என்று சொல்லக்கூடிய சளி தொல்லை இருக்கும். 
அதேபோல் பெயரின் கூட்டு எண் 19  20   21  22  23  24  25   26 27 ,( இந்த எண்கள் கடக ராசியில் வரும் )   போன்ற எண்களையும் 82  83  84  85  86 87  88  89 90 (இந்த எண்கள் மகர ராசியில் வரும்)    பெயரில் கூட்டு எண்களாக பெற்றவர்களுக்கும் SYNOS  PROBLEM  சளி தொல்லை இருக்கும். காரணம் மேலே சொன்ன எண்கள் அனைத்தும் நீர் ராசியான கடக ராசியிலும்  மகர ராசியிலும்  வருவதால் இந்த பிரச்சனை இருக்கும்.  
Share this article :

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

சமீபத்திய கருத்துகள்