Follow us: Subscribe via RSS Feed Connect on YouTube Connect on YouTube

செவ்வாய், 29 நவம்பர், 2011

வெற்றியை தரும் பெயர் அமைப்புகள் உண்டா?

ஜோதிட சாஸ்திரத்தை அடிப்படையாக கொண்ட பல சாஸ்திரங்களில் , கைரேகை, எண்கணித ஜோதிடம். நேமாலஜி , புரோனாலாஜி,  என்ற பிரிவுகள்  உள்ளன. என்னிடம் ஜோதிடம் பர்ர்க்க வருபவர்களிடமும், அதிர்ஷ்ட முறையில் குழந்தைகளுக்கு பெயர் வைக்க வருபவர்களிடமும் சரி, அல்லது அதிர்ஷ்ட முறையில் பெயரை திருத்தம்  செய்ய வருபவர்களிடமும் சரி, அவர்களின் ஜாதகத்தை நன்கு அலசி ஆராய்ந்து மேலே சொன்ன நியூ மராலாஜி , நேமாலாஜி, புரோனாலாஜி , முறைல்யில்தான் பெயரை அமைத்து கொடுப்பேன்.ஒருவருடைய ஜாதகத்தில் யோகங்கள் இருந்தாலும், இல்லை என்றாலும் சரி பெயரில் உள்ள வெற்றியை தரும் ஒலி உச்சரிப்புகள் , அவரை வெற்றியின் உச்சத்திற்கு  அழைத்து செல்கின்றன. அரவிந்த், பிரவின், வினித், வினிதா, வினயன், வினாகமூர்த்தி, விந்தியா, விஷ்ணு, விஷ்வா, விஜய், பிரவினா, கோவிந்தராஜி, கோவிந்த், வின்சென்ட்  , அஷ்வின், இப்படி இன்னும், பல உதாரண பெயர்களை, சொல்லலாம். மேலே சொன்ன பெயர்களில், ஒரு சில பெயர்களுக்கு விளக்கம் , சொல்ல  வேண்டி இருக்கிறது, கோவிந்த், இந்த பெயரை ஆங்கிலத்தில் எழுதும்பொழுது GOVINTH, இந்த பெயரை தனி  தனியாக பிரித்து பார்க்கும்பொழுது  GO VIN TH என்று வருகிறது , அதாவது வெற்றியை, நோக்கி செல் என்று  பொருள் தந்து , வெற்றி பாதைக்கு  அழைத்து செல்கிறது.  மற்ற பெயர்களை  பிரித்து பார்க்கும்பொழுது  வினித், ( VINITH, )இந்த பெயரை தனி தனியாக   பிரித்து  பார்க்கும்பொழுது ,VIN  ITH, என்று வருகிறது , அதாவது பெயரின்  ஆரம்பத்திலேயே   VIN  என்ற உச்சரிப்பு  வெற்றி  என்ற பொருளை தந்து அவரை வெற்றி பாதைக்கு  அழைத்து செல்கிறது . 

அதேபோல் வினோத் (VINOTH ) என்ற பெயரை , அதிர்ஷ்ட பெயரா என்று ஆராய்ச்சி நோக்கோடு எடுத்து பார்க்கும்பொழுது, VIN  NO  அதாவது வெற்றி என்பதே இல்லை என்று பொருள் தருகிறது. அதற்காக இந்த பெயரை வைத்துள்ளவர்கள் எல்லாம் வெற்றி பெற போவதில்லை என்று நாம் சொல்ல  முடியாது. அவருடைய ஜாதக அமைப்பு யோகமான அமைப்பாக இருந்தால் எல்லாமே சிறப்பாக இருக்கும். இந்த பெயர் அதிஷ்ட பெயர் அமைப்பு முறைப்படி  சரியாக உள்ளதா  என்று பார்த்தால் சரியான பெயர் அமைப்பாக இல்லை.   

பெயரில்  MAR  என்று முடியும் சொல்லும். பெயரின்   ஆரம்பத்திலேயே  MAR என்று ஆரம்பிக்கும் பெயர் அமைப்புகளும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் உச்சரிப்புகளாகும்.காரணம் MAR  என்ற சொல்லுக்கு தமிழ் அகராதியில் பொருளை தேடி பார்த்தோமானால் , நாசம் விளைவிக்கிற கேடு விளைவிக்கிற  என்ற பொருள் தரும். பெயரிலே இப்படி அபசகுனமான பொருளை தரும் சொல் இருக்கும்பொழுது அது தீங்கு விளைவிக்கும் சூழ் நிலைக்கு கொண்டு போய் விட்டு விடும். உதாரணதிற்கு குமார் என்ற பெயரை பார்க்கும்பொழுது, KU  MAR . KU ( இந்த இரண்டு  எழுத்துக்கும்   உரிய எண்கள் (2  6  ).  
 இந்த இரண்டு எண்களின் கூட்டு எண்ணிக்கை , 2 + 6 = 8 . இந்த எட்டு என்ற எண் ஆயுளுக்கு அதிபதியான சனி பகவானை குறிக்கிறது. அடுத்து வரும் எழுத்துக்கள் MAR  இதன் பொருள் நாசம் விளைவிக்கிற, கேடு விளைவிக்கிற , என்று பொருள் வரும். அதாவது, குமார் என்ற பெயர் ஆயுளுக்கு  பங்கத்தை   விளைவிக்க கூடிய  பெயர் அமைப்பாக விளங்குகிறது என்று நாம் பொருள் கொள்ளவேண்டும். 
இப்படியாக அதிர்ஷ்ட  பெயர் அமைக்கும் முறையில் பல நுணுக்கங்கள் உள்ளது. ஒரு பெயரில் வெற்றியை தரும்,  ஒலி உச்சரிப்புகள் இருந்து ,நியூ நியூமராலஜி படி பெயரின் கூட்டு எண்ணிக்கையும் சிறப்பான எண்ணாக அமைந்துவிட்டால் வாழ்க்கையில் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றிதான்.   




Share this article :

1 கருத்துகள்:

  1. விந்தியா என்ற பெயரில் உள்ள அர்த்தம் மற்றும் நன்மை தீமைகள் எவை?

    பதிலளிநீக்கு

சமீபத்திய கருத்துகள்